ஊடக வெளியீடுகள்

Filter by:
Election Political Party Meeting 16-03-2026

தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக மாவட்ட அளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–(2026) தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக மாவட்ட அளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது. (PDF 64KB)

DEO flag off 15-03-2026 01

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பறக்கும் படை குழு வாகனங்களை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026

இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பறக்கும் படை குழு வாகனங்களை இன்று (15-03-2026) துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருமதி.மகேஸ்வரி, தனி (வட்டாட்சியர்)              தேர்தல் திரு.தணிகைவேல், சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட […]

படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் காரணமாக திங்கள்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நிறுத்தி வைக்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு 15.03.2026 இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் தமிழ்நாடு அரசின் முதல்வரின் முகவரித்துறையின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரதி வாரம் திங்கள்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது, இந்திய தேர்தல் ஆணையத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப்பெறப்படுவது தொடர்பான மறு அறிவிப்பு வரும் வரை […]