Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
மாவட்ட நலவாழ்வு சங்கம் – செவிலியர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு

மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூரில் – இயக்குநர்-பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, இயக்குநர்-மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் மற்றும் இயக்குநர்- மருத்துவக் கல்வி & ஆராய்ச்சி கீழ் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தற்காலிக செவிலியர் (Staff Nurse) பதவிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு அலுவலகத்தில் 25.09.2026 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

12/09/2026 25/09/2026 பார்க்க (198 KB) Application Form (160 KB)
மாவட்ட இளைஞர் நீதிக்குழும், கோயம்புத்தூர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் அமர்வு எழுத்தர், பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் என 3 தற்காலிகப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர்–18 என்ற முகவரிக்கு 22.09.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் சமர்ப்பிக்கலாம்.

09/09/2026 22/09/2026 பார்க்க (277 KB)
மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் – வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள முற்றிலும் தற்காலிகமாக நுண்ணுயிரியலாளர்  (C & DST Lab) மற்றும் ஓட்டுநர் (நடமாடும் எக்ஸ்-ரே வாகனம்) பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

03/09/2026 17/09/2026 பார்க்க (545 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ், கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • ஆய்வக நுட்புநர் நிலை-III (Lab Technician Gr-III) – 3 பணியிடங்கள்
  • தொழில்சார் சிகிச்சையாளர் (DEIC) – 1 பணியிடம்
  • மாவட்ட திட்ட மேலாளர் (District Programme Manager) – 1 பணியிடம்
  • RMNCH+A ஆலோசகர் (பெண்கள் மட்டும்) – 2 பணியிடங்கள்
  • உதவியாளர் மற்றும் தரவு உள்ளீட்டு இயக்குநர் (Assistant-cum-Data Entry Operator / DEO) – 1 பணியிடம்
  • ULB-UHN/ANM – 75 பணியிடங்கள்
  • தூய்மைப் பணியாளர் (Cleaner) – 2 பணியிடங்கள்

 

18/08/2026 15/09/2026 பார்க்க (188 KB) விண்ணப்பம் (146 KB)
ஆவணகம்