Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் – வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள முற்றிலும் தற்காலிகமாக நுண்ணுயிரியலாளர்  (C & DST Lab) மற்றும் ஓட்டுநர் (நடமாடும் எக்ஸ்-ரே வாகனம்) பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

03/09/2026 17/09/2026 பார்க்க (545 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ், கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • ஆய்வக நுட்புநர் நிலை-III (Lab Technician Gr-III) – 3 பணியிடங்கள்
  • தொழில்சார் சிகிச்சையாளர் (DEIC) – 1 பணியிடம்
  • மாவட்ட திட்ட மேலாளர் (District Programme Manager) – 1 பணியிடம்
  • RMNCH+A ஆலோசகர் (பெண்கள் மட்டும்) – 2 பணியிடங்கள்
  • உதவியாளர் மற்றும் தரவு உள்ளீட்டு இயக்குநர் (Assistant-cum-Data Entry Operator / DEO) – 1 பணியிடம்
  • ULB-UHN/ANM – 75 பணியிடங்கள்
  • தூய்மைப் பணியாளர் (Cleaner) – 2 பணியிடங்கள்

 

18/08/2026 15/09/2026 பார்க்க (188 KB) விண்ணப்பம் (146 KB)
போட்டித் தேர்வு பயிற்றுநர்கள்

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் TNPSC, TNUSRB, TRB, TET, SSC, RRB, IBPS உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி வகுப்புகளை நடத்த தகுதியும் அனுபவமும் உள்ள பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர். பயிற்றுநர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 மதிப்பூதியம் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புடன் 07.09.2026க்குள் துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், G.N. மில்ஸ், கோவை–29 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0422-2642388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

25/08/2026 07/09/2026 பார்க்க (231 KB)
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027

கோயம்புத்தூர் மாவட்டத்தில், இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டமான வீடுகள் பட்டியலிடல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு (HLO) நடைபெறவுள்ளன. பொதுமக்கள் 17.07.2026 முதல் 31.07.2026 வரை https://se.census.gov.in இணையதளம் மூலம் சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) செய்து கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து 01.08.2026 முதல் 30.08.2026 வரை கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வார்கள். சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த பின்னர் கிடைக்கும் 12 இலக்க எண்ணை பாதுகாப்பாக வைத்திருந்து, கணக்கெடுப்பாளரிடம் வழங்கி விவரங்களை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெறுவதால், கோயம்புத்தூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் சுய கணக்கெடுப்பில் பங்கேற்று, கணக்கெடுப்பு பணிக்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

13/07/2026 30/08/2026 பார்க்க (2 MB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில்  மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், 22.08.2026 அன்று காலை 8  மணியளவில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரியில்  அமைந்துள்ள இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login ல் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.

22/08/2026 22/08/2026 பார்க்க (128 KB)
கோயம்புத்தூரில் விதைச் சான்று அலுவலகக் கட்டிடத்தை வலுப்படுத்துதல்

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துரையின் அரசாணை எண். (2D). 126, நாள். 30.06.2026- இன் கீழ் தரமான விதை உற்பத்தியைச் தக்க வைப்பதற்கான விதைச் சான்று அலுவலகக் கட்டிடத்தை வலுப்படுத்துதல்

05/08/2026 20/08/2026 பார்க்க (487 KB)
2025-2026 -ஆம் நிதியாண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம்

கோயம்புத்தூர் மாவட்டம் 2025-2026 -ஆம் நிதியாண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம்

16/10/2025 29/07/2026 பார்க்க (1,016 KB)
பதிவுரு எழுத்தர் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கோவை மாவட்ட , நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

18/06/2026 09/07/2026 பார்க்க (83 KB) விண்ணப்பம் (53 KB)
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – 2026

சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பான சேவையாற்றி வரும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.

15 முதல் 35 வயதுக்குட்பட்ட 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் இவ்விருதிற்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்விருதில் ரூ.1,00,000 ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.

அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, 15.08.2026 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

08/06/2026 06/07/2026 பார்க்க (259 KB)
சட்ட அலுவலர்கள் நியமனம் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அரசு, கடித எண் 9987/Cts.VIA/2026-1, தேதி 01.06.2026 மூலம், காலவரையறை அடிப்படையில் சட்ட அலுவலர்களை (Law Officers) நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் காலவரையறை அடிப்படையில் நிரப்பப்பட உள்ள  சட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்காக, உரிய சரிபார்ப்பிற்குப் பிறகு வழக்கறிஞர்களின் விண்ணப்பங்களுடன் அவர்களின் பெயர் பட்டியலை  அனுப்புமாறும் கோரியுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞராக  குறைந்தது ஏழு ஆண்டுகள் அனுபவமுள்ள வழக்கறிஞர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் முதலில் 25.06.2026 அன்று மாலை 6.00 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மேலும் 05 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட கடைசி நாள் மற்றும் நேரம் 30.06.2026 அன்று மாலை 6.00 மணி ஆகும்.

மேற்கண்ட தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவிதத்திலும் பரிசீலிக்கப்படாது; அவை உடனடியாக நிராகரிக்கப்படும்.

08/06/2026 30/06/2026 பார்க்க (241 KB) அறிவிப்பில் செய்யப்பட்ட திருத்தம் (200 KB)