ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மாவட்ட நலவாழ்வு சங்கம் – செவிலியர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு | மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூரில் – இயக்குநர்-பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, இயக்குநர்-மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் மற்றும் இயக்குநர்- மருத்துவக் கல்வி & ஆராய்ச்சி கீழ் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தற்காலிக செவிலியர் (Staff Nurse) பதவிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு அலுவலகத்தில் 25.09.2026 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. |
12/09/2026 | 25/09/2026 | பார்க்க (198 KB) விண்ணப்ப படிவம் (160 KB) |
| PMJAY / ABDM களப்பணி உதவியாளர் – ஆட்சேர்ப்பு – அறிவிப்பு | கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள PMJAY / ABDM களப்பணி உதவியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் 23.09.2026 அன்று மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. |
18/09/2026 | 23/09/2026 | பார்க்க (318 KB) விண்ணப்ப படிவம் (427 KB) |
| மாவட்ட இளைஞர் நீதிக்குழும், கோயம்புத்தூர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் அமர்வு எழுத்தர், பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் என 3 தற்காலிகப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர்–18 என்ற முகவரிக்கு 22.09.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் சமர்ப்பிக்கலாம். |
09/09/2026 | 22/09/2026 | பார்க்க (277 KB) |
| மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் – வேலைவாய்ப்பு | கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள முற்றிலும் தற்காலிகமாக நுண்ணுயிரியலாளர் (C & DST Lab) மற்றும் ஓட்டுநர் (நடமாடும் எக்ஸ்-ரே வாகனம்) பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
03/09/2026 | 17/09/2026 | பார்க்க (545 KB) |
| மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு | கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ், கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
18/08/2026 | 15/09/2026 | பார்க்க (188 KB) விண்ணப்பம் (146 KB) |
| போட்டித் தேர்வு பயிற்றுநர்கள் | கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் TNPSC, TNUSRB, TRB, TET, SSC, RRB, IBPS உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளை நடத்த தகுதியும் அனுபவமும் உள்ள பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர். பயிற்றுநர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 மதிப்பூதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புடன் 07.09.2026க்குள் துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், G.N. மில்ஸ், கோவை–29 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0422-2642388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். |
25/08/2026 | 07/09/2026 | பார்க்க (231 KB) |
| பதிவுரு எழுத்தர் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | கோவை மாவட்ட , நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
18/06/2026 | 09/07/2026 | பார்க்க (83 KB) விண்ணப்பம் (53 KB) |
| சட்ட அலுவலர்கள் நியமனம் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | அரசு, கடித எண் 9987/Cts.VIA/2026-1, தேதி 01.06.2026 மூலம், காலவரையறை அடிப்படையில் சட்ட அலுவலர்களை (Law Officers) நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் காலவரையறை அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்காக, உரிய சரிபார்ப்பிற்குப் பிறகு வழக்கறிஞர்களின் விண்ணப்பங்களுடன் அவர்களின் பெயர் பட்டியலை அனுப்புமாறும் கோரியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞராக குறைந்தது ஏழு ஆண்டுகள் அனுபவமுள்ள வழக்கறிஞர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் முதலில் 25.06.2026 அன்று மாலை 6.00 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மேலும் 05 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட கடைசி நாள் மற்றும் நேரம் 30.06.2026 அன்று மாலை 6.00 மணி ஆகும். மேற்கண்ட தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவிதத்திலும் பரிசீலிக்கப்படாது; அவை உடனடியாக நிராகரிக்கப்படும். |
08/06/2026 | 30/06/2026 | பார்க்க (241 KB) அறிவிப்பில் செய்யப்பட்ட திருத்தம் (200 KB) |
| மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள தற்காலிகமானபதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோவை மாவட்டத்தில் உள்ள, கோயம்புத்தூர் மாநகராட்சி, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி (ம) அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள Medical Officer(UHWC)-11, Health Inspector GrII (UHWC)-09, Staff Nurse(UHWC)-08, ULB-UHN-85, Health Inspector GrII(MTM)-11, Mid Level Health Provider(MLHP)-03, Data Manager(IDSP)-01, Programme cum Administrative Assistant-01, Cleaner-03, Multipurpose Hospital Worker-13, Dental Technician (DEIC)-1, Optometrist(DEIC)-1, Occupational Therapist(DEIC)-1, Sanitary Worker(SNCU)-2, CEmONC Security Guard-2 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
22/05/2026 | 15/06/2026 | பார்க்க (273 KB) விண்ணப்பம் (107 KB) |
| சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
12/05/2026 | 02/06/2026 | பார்க்க (317 KB) |