மாவட்ட ஆட்சித்தலைவர் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் வழங்கி வரவேற்றார்
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2022மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து கோயம்புத்தூர் மாநகராட்சி இராமநாதபுரம் துவக்கப் பள்ளியில் 13.06.2022 அன்று மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் வழங்கி வரவேற்றார்கள்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2022கோயம்புத்தூர் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியினை 12.06.2022 அன்று தொடங்கி வைத்து கலந்து கொண்டார்கள்.
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்ட அரசுப்பொருட்காட்சி சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் தொடங்கி வைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுப்பொருட்காட்சியினை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் மற்றும் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் 11.06.2022 அன்று சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் தொடங்கி வைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டார்கள். (PDF 62KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்ட இராமநாதபுரம்-சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் சந்திப்புகளில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவரகள் தலைமைச் செயலகத்தில் 11.06.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் இராமநாதபுரம்-சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் சந்திப்புகளில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் இராமநாதபுரம்-சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் மேம்பாலங்களில் வாகனப்போக்குவரத்தை கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டார்கள். (PDF 422KB)
மேலும் பலமாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு பணி ஆணைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஆணைகளையும் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளையும் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் 10.06.2022 அன்று வழங்கினார்கள். (PDF 410KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் 09.06.2022 அன்று பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள். (PDF 78KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கடன் பெறுவதற்கான ஆணையினை வங்கி பயனாளிகளுக்கு வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கிகளின் சார்பில் 75 வாடிக்கையாளர்களுக்கு ரூ.12.60 கோடி மதிப்பில் கடன்கள் பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் 08.06.2022 அன்று வழங்கினார்கள். (PDF 227KB)
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் 08.06.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழு தலைவர் / கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி.ஆர்.நடராஜன் அவர்கள் தலைமையில் 08.06.2022 அன்று நடைபெற்றது. (PDF 209KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2022கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டபணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் 07.06.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 507KB)
மேலும் பலகலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பு முகாம் 07.06.2022 அன்று நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பு முகாம் 07.06.2022 அன்று 37 கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 25KB)
மேலும் பல