சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பாற்றியவர்களுக்கு ‘பசுமை சாம்பியன் விருதினை’ மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பாற்றிய கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 3 நபர்களுக்கு ‘பசுமை சாம்பியன் விருதினை’ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 06.06.2022 அன்று வழங்கினார்கள். (PDF 43KB)
மேலும் பலமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 06.06.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 06.06.2022 அன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 33KB)
மேலும் பலபிரதம மந்திரியின் தேசிய அப்ரண்ட்டீஸ் சேர்க்கை முகாம் 13.06.2022 அன்று நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2022கோயம்புத்தூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தேசிய அப்ரண்ட்டீஸ் சேர்க்கை முகாம் (PM NAM) கோயம்புத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 13.06.2022 அன்று நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய குடிமைப்பணிகள் முதனிலை தேர்வு நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய குடிமைப்பணிகள் முதனிலை தேர்வு நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் நிர்மலா மகளிர் கல்லூரி மையத்தில் 05.06.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலமாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல்வேறு சாலை பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2022கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.113.27 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலை பணிகளை மாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் 04.06.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். (PDF 392KB)
மேலும் பலமுத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மக்கள் நலத்திட்டப்பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2022முத்தமிழறிஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் கலைஞர் அவர்களின் மக்கள் நலத்திட்டப்பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டார். (PDF 206KB)
மேலும் பலஇந்திய குடிமைப்பணிகள் முதனிலை தேர்வு நடைபெறுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் குடிமைப்பணிகள் தேர்வு பார்வையாளர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இந்திய குடிமைப் பணிகள் முதனிலை தேர்வு நடைபெறுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் குடிமைப் பணிகள் தேர்வு பார்வையாளர் திரு.சிவசண்முக ராஜா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் 03.06.2022 அன்று நடைபெற்றது .
மேலும் பலஇரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது முதிர்வடைந்த பயனாளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2022மாண்புமிகு முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது முதிர்வடைந்த பயனாளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள் -பத்திரிகைச் செய்தி (PDF 38KB)
மேலும் பலஅனைத்து தொழில் முனைவோர்களும் தொழில் நிறுவனங்களும் தொழில் துவங்க மற்றும் விரிவாக்க ஒப்புதல்களை பெற ஒரு முனை இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2022குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் / நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பல்துறை உரிமங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பெறுவதற்கு WWW.TNSWP.COM/DIGIGOV என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் -பத்திரிகைச் செய்தி (PDF 34KB)
மேலும் பலவருவாய் தீர்வாய முகாம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 01.06.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2022கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1431ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் 250 பயனாளிகளுக்கு ரூ.37.16 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 01.06.2022 அன்று வழங்கினார்கள். (PDF 36KB)
மேலும் பல