பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 02/11/2022கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதை 02.11.2022 அன்று மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் தியாகராஜன் கலந்து கொண்டனர்.(PDF 35KB)
மேலும் பலசுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு கேடயங்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 02/11/2022கோயம்புத்தூர் மண்டல இணை இயக்குநர் அலுவலகம் அருகில் 31.10.2022 அன்று நடைபெற்ற சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, சுகாதாரத்துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய 44 அரசு அலுவலர்களுக்கு கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.எம்.பிரதாப் இ.ஆ.ப., இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலம்) மரு.சந்திரா, துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.அருணா, உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.(PDF 44KB)
மேலும் பலமதுக்கரை ஊராட்சி ஒன்றியம், சீரபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 01/11/2022உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், சீரபாளையம் ஊராட்சியில், போடிப்பாளையம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் 01.11.2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கிராம சபை கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர்.பி.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மதுக்கரை ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணைத் தலைவர் துர்கா, ஒன்றிய குழு உறுப்பினர் […]
மேலும் பலதேசிய ஒற்றுமை தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 01/11/2022சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை, தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு 31.10.2022 அன்று தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எம்.கோகிலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா, […]
மேலும் பலவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 29/10/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29.10.2022 அன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் டாக்டர்.தாரேஸ் அகமது இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.பி.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் திருமதி.எஸ்.பிரியங்கா இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் […]
மேலும் பலவரலாற்று சிறப்பு மிக்க பழமையான ஆவணங்கள் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/10/2022வரலாற்று சிறப்பு மிக்க பழமையான ஆவணங்கள் பற்றி விவரங்களை கோவை, மாவட்ட ஆவணக்காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். (PDF 39KB)
மேலும் பலமாநில கல்விக் கொள்கை தொடர்பாக மண்டல அளவிலான கருத்துக்கேட்புக் கூட்டம் மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழுத்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 29/10/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 29-10-2022 அன்று மாநில கல்விக் கொள்கை தொடர்பாக கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான கருத்துக்கேட்புக் கூட்டம் மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழுத்தலைவர்/ புதுடெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் திரு.டி.முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநில கல்விக் கொள்கை உறுப்பினர் செயலர் எ.கருப்பசாமி, உறுப்பினர்கள் அருணா, ஜவஹர்நேசன், ராமானுஜம், திருப்பூர் சார் […]
மேலும் பலதமிழ்நாடு ஆளுநர் கோயம்புத்தூர் வருகை
வெளியிடப்பட்ட நாள்: 27/10/202227-10-2022 அன்று கோயம்புத்தூர் வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.,மாநகர காவல் ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.பிரதாப் இ.ஆ.ப, ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் பலமாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் தொழில் அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 27.10.2022 அன்று மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் தொழில் அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., மேற்கு மண்டல காவல் துறை தலைவர் முனைவர்.சுதாகர் இ.கா.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் இ.கா.ப. […]
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2022கோயம்புத்தூர் மாவட்டம், பச்சாபாளையத்தில் செயல்பட்டுவரும் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆவின் பொருட்கள் உற்பத்தி பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து 26.10.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, உதவி பொதுமேலாளர்கள் அருண்குமார்(பொறியியல்), அந்தோனி (தரக்கட்டுப்பாடு), சிவசங்கரி(கணக்கு), கோகுல்கார்த்திக்(நிர்வாகம்), டாக்டர்.தனபாலன்(பால்உற்பத்தி மற்றும் உள்ளீடு), துணை பதிவாளர்(பால்வளம்) புவனேஸ்வரி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சுதர்சன் உதவிப்பொறியாளர் மணி விஸ்வநாதன், […]
மேலும் பல