மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் மலைப்பாதையினை ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2022மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை 22.05.2022 அன்று பூண்டி வெள்ளியங்கிரி மலைப்பாதையில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 224KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் திடீர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2022கோயம்புத்தூர் பாலசுந்தரம் சாலையில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் 21.05.2022 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-II தேர்வினை நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-II தேர்வு நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் அரசினர் கலை அறிவியல் கல்லூரி தேர்வு மையத்தில் 21.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2022முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 03.06.2022 அன்று நடத்தப்பட உள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 46KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்பு
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 20.05.2022 அன்று கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.
மேலும் பலஉலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 20.05.2022 அன்று பார்வையிட்டார்கள். (PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியினை நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2022கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மெக்ரிக்கர் ரோடு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் அவர்கள் 19.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 39KB)
மேலும் பலதொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடனான கலந்துரையாடல் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2022தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடனான கலந்துரையாடல் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 19.05.2022 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்றது. (PDF 1.22MB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொல்பொருட்கள் மாதிரிகள் மற்றும் அரசின் ஓராண்டு அரும்பணிகளின் தொகுப்பு ஓவிய கண்காட்சியினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் மைதானத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் மாதிரி கண்காட்சி மற்றும் தமிழ்நாடு அரசு கடந்த ஓராண்டில் ஆற்றிய அரும்பணிகளின் தொகுப்பு ஓவிய வடிவங்களின் கண்காட்சி ஆகியவற்றை 19.05.2022 அன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும் பலமாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஆழியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீரினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கோயம்புத்தூர் ஆனைமலை வட்டம் ஆழியாறு அணையிலிருந்து பழைய ஐந்து வாய்க்கால்களின் மூலம் முதல் போக பாசனத்திற்கு தண்ணீரினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். (PDF 33KB)
மேலும் பல