மாண்புமிகு இந்திய குடியரசுத் துணை தலைவர் கோவை வருகை
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2022மாண்புமிகு இந்திய குடியரசுத் துணை தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்ததையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 16.05.2022 அன்று விமான நிலையத்தில் வரவேற்றார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2022கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 15.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலவிவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன-பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2022தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3430 விவசாயிகளுக்கு ரூ.51.45 இலட்சம் மதிப்பில் 3,43,000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 37KB)
மேலும் பலமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2022கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் திரு. டாகடர். ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப அவர்கள் 13.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.நிர்மளா அவர்கள் கலந்து கொண்டனர். (PDF 37KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் பாரதியார் பல்கலைகழக மாணவர்களுடன் கலந்துரையாடினார்
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2022மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கோவை மாவட்ட பாரதியார் பல்கலைகழகத்தில் பல்வேறு துறையை சார்ந்த மாணவர்களுடன் 12.05.2022 அன்று கலந்துரையாடினார். மேலும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மகாகவி சுப்ரமணிய பாரதியார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மேலும் பலசமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் திருமதி. ஏ.எஸ்.குமரி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் 11.05.2022 அன்று நடைபெற்றது. (PDF 42KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி மாம்பழங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2022தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் அவர்களின் உத்தரவின்படியும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் கோயம்புத்தூர் மாநகர பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மரு.கு.தமிழ்செல்வன் அவர்களது தலைமையில் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு புருண்டி குடியரசு நாட்டின் தூதரை மாவட்ட ஆட்சித்தலைவர் புத்தகம் வழங்கி வரவேற்றார்
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2022கோயம்புத்தூர் மாவட்டத்திற்க்கு வருகைதந்த புருண்டி குடியரசு நாட்டின் மாண்புமிகு தூதர் திருமதி. ஸ்டெல்லா புதிரிகன்யா அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 11.05.2022 அன்று புத்தகம் வழங்கி வரவேற்றார்.
மேலும் பலஅவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நன்றி நவிலும் விழாவில் உரையாற்றினார்
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் நன்றி நவிலும் விழாவில் உரையாற்றினார் மேலும் இறுதியாண்டு கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
மேலும் பல2022-2023-ஆம் கல்வியாண்டில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் மூலம் சேர்க்கை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக்ப்பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் மூலம் சேர்க்கை பெற https://rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் -பத்திரிகைச் செய்தி (PDF 62KB)
மேலும் பல