மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 09.05.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 09.05.2022 அன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 24KB)
மேலும் பலமாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஆகியோர் சங்கமம் கூட்டுபண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளமடை பகுதியில் நடத்தப்பட்டு வரும் சங்கமம் கூட்டுபண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திருமதி. சித்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். (PDF 97KB)
மேலும் பல29வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் – 08-05-2022
வெளியிடப்பட்ட நாள்: 07/05/202229வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் – 08-05-2022 (PDF)
மேலும் பலநகர நிலவரித்திட்டத்தின் கீழ் பட்டா பெற்றுக் கொள்வதற்கான இறுதி வாய்ப்பு -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2022கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-(AB)28-க்குட்பட்ட பிளாக் 1 முதல் 20 வரையிலான பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கோயம்புத்தூர் (தெற்கு) நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பட்டா பெற பதிவு தபால் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் -பத்திரிகைச் செய்தி
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி ‘சவர்மா’ தயாரிக்கும் உணவகங்களில் இரண்டாம் நாளாக ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2022கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட நியமன அலுவலர் மரு.கு.தமிழ்செல்வன் அவர்களது தலைமையில் கோவை மாநகரில் கோவைப்புதூர், கணபதி, புலியகுளம், இராமநாதபுரம், வடவள்ளி, அவினாசி ரோடு, பீளமேடு, சூலூர், மலுமிச்சம்பட்டி மற்றும் பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் ‘சவர்மா’ தயாரிக்கும் உணவகங்களில் இரண்டாம் நாளாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (PDF 311KB)
மேலும் பலவேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மதுக்கரை வட்டாரம் சீராப்பாளையம் பகுதிகளில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வட்டாரம் சீராப்பாளையம் பகுதிகளில் வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது ஆய்வு மேற்கொண்டு சீராப்பாளையம் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்திற்கு உழவு இயந்திரங்களை வழங்கினார் மற்றும் வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை 07.05.2022 அன்று நட்டு வைத்தார். (PDF 57KB)
மேலும் பலவேலைவாய்ப்பற்ற பழங்குடியின மக்களுக்கு அரசு பொது தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் வசித்து வரும் வேலைவாய்ப்பற்ற பழங்குடியின மக்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்வதை ஊக்குவிக்கும் பொருட்டு TNPSC, SSC, Railway, TRB ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 06.05.2022 அன்று துவக்கி வைத்தார். (PDF 32KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி ‘சவர்மா’ தயாரிக்கும் உணவகங்களில் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2022தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் அவர்களின் உத்தரவின்படியும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் கோவை மாவட்டத்தில் உள்ள் ‘சவர்மா’ தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மரு.கு.தமிழ்செல்வன் அவர்களது தலைமையில் 05.05.2022 அன்று திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (PDF 30KB)
மேலும் பலமாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் உக்கடம் குடிசை மாற்றுவாரிய திட்டப்பகுதி குடிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2022கோயம்புத்தூர் மாநகராட்சி உக்கடம் குடிசை மாற்றுவாரிய திட்டப்பகுதி, டோபிகாலனி உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் 05.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் , மாநகராட்சி துணை ஆணையர் திருமதி. ஷர்மிளா அவர்கள் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 42KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 05.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பல