சிறுவாணி இலக்கியத் திருவிழா- 2023
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2023கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுவாணி இலக்கியத் திருவிழா 25.02.2023 மற்றும் 26.02.2023 ஆகிய இரண்டு நாட்கள் பூ.சா.கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.மாணவர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த மாபெரும் சிறுவாணி இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 40KB) – பத்திரிகைச் செய்தி
மேலும் பலதமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2023கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான தடகள போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப அவர்கள் 23.02.2023 அன்று தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகு உட்பட மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆகியோர் உள்ளனர்.
மேலும் பலபட்டியலினம் மற்றும் பழங்குடியின முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2023பட்டியலினம் மற்றும் பழங்குடியின முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு. (PDF 40KB ) […]
மேலும் பலஅன்னூர் வட்டம் காரேகவுண்டன்பாளையத்தில் நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2023அன்னூர் வட்டம் காரேகவுண்டன்பாளையத்தில் 22.02.2022 அன்று நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய் கோட்டாட்சியர் திரு.பண்டரிநாதன், அன்னூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் திரு.சத்தியமூர்த்தி, காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.தங்கராஜ், துணைத்தலைவர் திரு.குருந்தாசலமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.ஜெயபால், அன்னூர் வட்டாட்சியர் தங்கராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.(PDF 230KB)
மேலும் பலகோவை மத்தியசிறையில் ஒர் இரவுக்காவலர் பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2023கோவை மத்தியசிறையில் ஒர் இரவுக்காவலர் பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 75KB) […]
மேலும் பலசட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்புக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 21.02.2023 அன்று சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்புக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.பத்ரிநாராயணன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப, மாநகர காவல் துணை ஆணையர்கள் சந்தீஸ், இ.கா.ப., மதிவாணன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிற்றரசு, மாநகர […]
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 21.02.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப, அவர்கள் தமிழ்ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் .இப்பேரணியில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் திருமதி.அ.புவனேஸ்வரி உட்பட தமிழ் அமைப்புகள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். (PDF 100KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.02.2023 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 20/02/202320.02.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.(PDF 35KB)
மேலும் பலமாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைகூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2023மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலர் முனைவர்.ப.செந்தில்குமார் இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு இயக்குநர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஸ் இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு. உமா இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ சேவை கழக இயக்குநர் திரு.அரவிந்த் இ.ஆ.ப., மருத்துவ […]
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 15/02/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 15.02.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர்(முத்திரைத்தாள்) திருமதி.செல்வசுரபி மற்றும் வட்டாட்சியர்கள் உள்ளனர்.
மேலும் பல