மாணவர்களின் பயன்பாட்டிற்காக பாரத் பெட்ரோலியம் வழங்கிய 2 பேருந்துகளின் இயக்கம் தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், டாப்சிலிப் வனத்துறை உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி மாணாக்கர்களின் பயன்பாட்டிற்காக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வழங்கிய 2 பேருந்துகளின் இயக்கத்தை இன்று (08.09.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 113KB)
மேலும் பலபிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் மாணவியருக்கு கராத்தே, சிலம்பம் பயிற்சி – நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு கராத்தே மற்றும் சிலம்பம் தற்காப்புக் கலைகளில் அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கராத்தே பயிற்சி 3 மாதங்களில் 36 வகுப்புகளும், சிலம்பம் பயிற்சி 2 மாதங்களில் 24 வகுப்புகளும் வழங்கப்பட வேண்டும். தகுதியான கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை 15.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என […]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், இன்று (07.09.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 57KB)
மேலும் பலகைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகள் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உடல்நல ஆலோசனைக்கான சிறப்பு முகாம் 15.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 12 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை நகராட்சி அலுவலகங்கள் மற்றும் […]
மேலும் பலPM-YASASVI கல்வி உதவித்தொகை – தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) மாணவர்களுக்கான PM-YASASVI கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 2026–27 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் 9–10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.75,000 வரையும், 11–12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரையும் கல்வி மற்றும் விடுதிக் கட்டணமாக வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025–26 ஆம் […]
மேலும் பலவெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயிலும் சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026தமிழ்நாடு அரசு, 2026–2027 ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயிலும் 10 சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு, ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36 இலட்சம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. தகுதியான மாணவர்கள் QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்தில் இருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை உரிய […]
மேலும் பலமாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், 2026–2027 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 71KB)
மேலும் பலவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை அமைப்பாளர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலை அமைப்பாளர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் 05.09.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 69KB)
மேலும் பலஅன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செப்.8-ல் நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து நடத்தும் சிறப்பு முகாம், 08.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இம்முகாமில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ், உதவி உபகரணங்கள், கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஆதார் மற்றும் […]
மேலும் பலசீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசு நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை கண்டறிந்து அகற்றும் பணிகள் தொடர்பாக, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.09.2026 அன்று, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 228KB)
மேலும் பல