ரூ.1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை மாண்புமிகு அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க. விக்னேஷ் அவர்கள் முன்னிலையில், இன்று (05.09.2026) பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.55.50 இலட்சம் மதிப்பில் புதிய சித்த மருத்துவ வெளிநோயாளிகள் பகுதி, ஆலம்பாளையம் மற்றும் ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் தலா […]
மேலும் பலமாண்புமிகு 155-வது பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் மலர்மாலை அணிவித்து மரியாதை
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026கோயம்புத்தூர் மாநகராட்சி, வ.உ.சி. மைதானத்தில், கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (05.09.2026) மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். (PDF 68KB)
மேலும் பலவிக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல் – 2027
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல் – 2027 – கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க அழைப்பு English –(PDF 351KB) Tamil – (PDF 80KB)
மேலும் பலவிநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள்
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிவருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி நீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் […]
மேலும் பலடாப்செட்கோ கடன் திட்டங்களுக்கான கடன் மேளா செப்.7-ல் நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்காக குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான கடன் மேளா 07.09.2026 அன்று காலை 10.30 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. ஆட்டுப்பண்ணை, ஹோட்டல், ஜவுளிக்கடை உள்ளிட்ட தொழில்களுக்கு தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கு சிறுதொழில் கடன் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில கல்விக் […]
மேலும் பலசுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செலக்கரச்சல் மற்றும் வாரப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 220KB)
மேலும் பலகுடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் – கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) தொடங்கி வைத்து, விற்பனையை பார்வையிட்டார். (PDF 61KB)
மேலும் பலகோயம்புத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மெகா முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், மசக்காளிப்பாளையம், மணி மஹாலில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மெகா முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) துவக்கி வைத்தார். (PDF 220KB)
மேலும் பலகப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள்: செப்டம்பர் 5-ஆம் தேதி அமைச்சர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, 05.09.2026 அன்று காலை 9.00 மணிக்கு, கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விடுதலைப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் […]
மேலும் பலஅரசம்பாளையம் மற்றும் கொண்டாம்பட்டி ஊராட்சிகளில் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், அரசம்பாளையம் மற்றும் கொண்டாம்பட்டி ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 226KB)
மேலும் பல