கோயம்புத்தூர் மண்டல ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (11.09.2026), மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் உதகமண்டலம் மாவட்டங்களை உள்ளடக்கிய கோயம்புத்தூர் மண்டல ஓய்வூதியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் (Pension Adalat) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதன்மைக் கணக்குத் தணிக்கை அலுவலக துணை மாநில கணக்காயர்கள் திரு. சவுரவ் ரமேஸ் மற்றும் திரு. தொம்மிகபி ஆகியோர் ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் […]
மேலும் பலசெப்டம்பர் 17 அன்று கல்விக் கடன் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மற்றும் உயர்கல்வியில் சேர உள்ள மாணவர்களுக்கு கல்விக் கடன் எளிதில் கிடைக்கும் வகையில், 17.09.2026 அன்று கோயம்புத்தூர், பீளமேடு, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. (PDF 56KB)
மேலும் பலமானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.30 கோடி மதிப்பிலான 377 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு 50% மானியமும், இதர விவசாயிகளுக்கு 40% மானியமும் வழங்கப்படும். தகுதியான பிரிவினருக்கு குறிப்பிட்ட கருவிகளுக்கு கூடுதல் மானியமும் வழங்கப்படும். விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7ஆம் தேதி மற்றும் 15 முதல் 21ஆம் தேதி வரை ‘உழவர் செயலி’ மூலம் […]
மேலும் பல“தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் – பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்திற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (11.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 52KB)
மேலும் பலபெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (11.09.2026), வரும் 17.09.2026 அன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதையொட்டி, திட்டத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 67KB)
மேலும் பலகாரமடை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.38 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கரம்பாளையம், பெள்ளாதி மற்றும் மூடுதுரை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் ரூ.5.38 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.09.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 65KB)
மேலும் பலசர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.80 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் CRI PUMP நிறுவனத்தின் பங்களிப்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.09.2026) திறந்து வைத்து, பார்வையிட்டார். (PDF 58KB)
மேலும் பலமதுக்கரையில் மக்கள் தொடர்பு முகாம்: 159 பயனாளிகளுக்கு ரூ.3.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், பிச்சனூர் கிராமம், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் மண்டபத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (09.09.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 159 பயனாளிகளுக்கு ரூ.3.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 67KB)
மேலும் பலபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைமையில் கோயம்புத்தூரில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், எஸ்.என்.எஸ். தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் இன்று (09.09.2026) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கையுந்து பந்து போட்டியில் பங்கேற்றார். (PDF 504KB)
மேலும் பலஅங்கக வேளாண்மை மற்றும் குறுவை சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை பரிமளா சுப்ரமணியம் மஹாலில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற அங்கக வேளாண்மை மற்றும் குறுவை சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.09.2026) துவக்கி வைத்து, பார்வையிட்டார். (PDF 66KB)
மேலும் பல