கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026கோயமுத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 62KB)
மேலும் பலபிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான கடன் திட்டங்கள்- விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. மேலும் இக்கழகம் பி.வ, மி.பி.வ (ம) சீ.ம மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கப்படுகிறது. எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிக […]
மேலும் பலஸ்டார்ட் RUN. ஸ்டாப் DRUGS – போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் செய்தியை வலியுறுத்தவும், “ஸ்டார்ட் RUN. ஸ்டாப் DRUGS – போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026” மாவட்டத் தலைநகரங்களில் 26.06.2026 அன்று காலை 5.30 மணிக்கு கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட உள்ளது. (PDF 226KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22-06-2026
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026கோயம்புத்தூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 223KB)
மேலும் பலஅமைச்சர்கள் முன்னிலையில் 248 மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மரு. கே.ஜி. அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி. சம்பத்குமார் அவர்கள் மற்றும் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க. விக்னேஷ் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நடைபெற்ற 5-வது பட்டமளிப்பு விழாவில் 100 மருத்துவ மாணவர்களுக்கும், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 55-வது பட்டமளிப்பு விழாவில் 148 மருத்துவ […]
மேலும் பலவங்கித்துறை செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வங்கித்துறை செயல்பாடுகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான ஆய்வுக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 18.06.2026 அன்று நடைபெற்றது. (PDF 226KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மரக்கன்றுகள் நடவு பணிகள் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேய்ச்சல் நிலத்தில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.06.2026) நடைபெற்றது. (PDF 232KB)
மேலும் பலபள்ளிகளில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின அனுசரிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து (தனியார் மற்றும் அரசு) பள்ளிகளிலும், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை அனுசரிக்கும் பொருட்டு, அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழியை எடுக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. (PDF 59KB)
மேலும் பலசிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவன விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கும் பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான விதிமுறைகள்: தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள்,பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை,அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் […]
மேலும் பலகல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026துணிவு மற்றும் வீரசாகச செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லாவிருது ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. துணிச்சல் மற்றும் வீரசாகச செயல்புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். (PDF 56KB)
மேலும் பல