மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகள் மற்றும் கோப்புகளை கையாள்வது தொடர்பாக துறை தலைவர்களுடனான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 15/02/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மேலாண்மை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகள் மற்றும் கோப்புகளை கையாள்வது தொடர்பாக துறை தலைவர்களுடனான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் திருமதி.சாந்தி, அரசுத்துணை செயலாளர் திரு.சி.ஹரிகிருவ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு) திரு.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.
மேலும் பலமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 14/02/2023கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் 14.02.2023 அன்று கூட்டுறவுத் துறையின் சார்பில் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திக்குமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.பார்த்திபன், துடியலூர் கூட்டுறவு சேவா ஸ்தாபன மேலாண் இயக்குனர் திரு.சிவக்குமார், மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி.இந்துமதி உட்பட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பலபள்ளி சிறார்களுக்கான குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 14/02/2023கோயம்புத்தூர் மாநகராட்சி சித்தாப்புதூர் மேல்நிலைப்பள்ளியில் 14.02.2022 அன்று நடைபெற்ற பள்ளி சிறார்களுக்கான குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திக்குமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார். அருகில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மண்டலக்குழுத்தலைவர் திருமதி.மீனா லோகு, மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா ஆகியோர் உள்ளனர்.
மேலும் பலதமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 14.02.2023 முதல் 28.02.2023 வரை நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2023கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது . விளையாட்டு அட்டவணை – பத்திரிக்கைசெய்தி(PDF992KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகையினை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2023கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் 08.02.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப,அவர்கள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் மரு.V.கீதாலெட்சுமி, கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யாதேவி, வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) (பொ) பண்டரிநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் ரா.ஆண்டாள், மண்டலக்குழுத் தலைவர் (மேற்கு) தெய்வானை தமிழ்மறை, […]
மேலும் பலஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற இணையவழி பதிவேற்றம் செய்வது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2023ஆதிதிராவிடர் பழங்குடியின மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆததிராவிடர் மாணவ/ மாணவியர்கள் கல்விஉதவித்தொகை பெற இணையவழி பதிவேற்றம் செய்வது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் செல்வன், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் பழனிசாமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 220KB)
மேலும் பலதிருங்கையர் முன்மாதிரி விருது 2023
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2023திருநங்கையர்களில் சிறப்பாக முன்னேறியவர்களில் ஒருவருக்கு முன் மாதிரி விருது தகுதியான திருநங்கையர்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது.மேற்படி இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் திருநங்கையர்கள் www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு மேற்கொண்டு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி உரிய வழிமுறைகளுடன் விருதிற்கான கருத்துருக்களை 28.02.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொள்கிறார். (PDF 530KB) […]
மேலும் பலபேரூர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கல்யாணி யானைக்கு அமைக்கப்பட்ட குளியல் தொட்டியினை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2023கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கல்யாணி யானைக்கு அமைக்கப்பட்ட குளியல் தொட்டியினை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் 07.02.2023 அன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா, இணை ஆணையர் பரஞ்சோதி, அறங்காவலர் நியமன மாவட்ட குழு தலைவர் ராஜாமணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் தனபால், கர்ணபூபதி, கவிதா, […]
மேலும் பலஉழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2023உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 06.02.2023 அன்று சர்க்கார் சாமகுளம் ஊராட்சி ஒன்றியம், வையம்பாளையத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் திரு செந்தில்பாலாஜி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திக்குமார் பாடி இ.ஆ.ப., மற்றும் அன்னாரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06.02.2023 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/02/202306.02.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் இ.ஆ.ப., அவர்கள் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் பல