ஊடக வெளியீடுகள்

Filter by:
Agri GDP 25-06-2026 2

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 219KB)

Hon'ble Minister Chairs Technical Textiles Meet 01

மாண்புமிகு அமைச்சர் தலைமையில் தொழில்நுட்ப ஜவுளி கூட்டம்: ரூ.123 கோடி மதிப்பிலான 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் ரூ.123 கோடி மதிப்பில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. (PDF 92KB)

CEO Inspection 24-06-2026 02

கோயம்புத்தூர் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கை தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம், தெற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கினை இன்று (24.06.2026) தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் திருமதி.அர்ச்சனா பட் நாயக் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 219KB)

DC Inspection 24-06-2027 01

சுந்தராபுரம் சமூக நீதி மாணவர் விடுதியில் வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் சமூக நீதி மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.06.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 58KB)

படங்கள் ஏதும்  இல்லை

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் – கிறித்துவ தேவாலய பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் – விண்ணப்பிக்க அழைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் முதியோர் ஓய்வூதியம் மேற்படி நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவதை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் […]

படங்கள் ஏதும்  இல்லை

கிறித்துவ தேவாலய பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் – விண்ணப்பிக்க அழைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் முதியோர் ஓய்வூதியம். மேற்படி நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவதை எளிதாக்கும் […]

DC Inspection on 23-06-2026 02

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

கோயமுத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.  (PDF 62KB)

படங்கள் ஏதும்  இல்லை

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான கடன் திட்டங்கள்- விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. மேலும் இக்கழகம் பி.வ, மி.பி.வ (ம) சீ.ம மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கப்படுகிறது. எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிக […]

படங்கள் ஏதும்  இல்லை

ஸ்டார்ட் RUN. ஸ்டாப் DRUGS – போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் செய்தியை வலியுறுத்தவும், “ஸ்டார்ட் RUN. ஸ்டாப் DRUGS – போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026” மாவட்டத் தலைநகரங்களில் 26.06.2026 அன்று காலை 5.30 மணிக்கு கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட உள்ளது. (PDF  226KB)

GDP 22-06-2026 02

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 223KB)