ஊடக வெளியீடுகள்

Filter by:
DC Tree Planting 04

கணியூரில் “கோவை ஊரக வனம் – ஊராட்சிகளின் சங்கமம்” திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், கணியூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., கலந்து கொண்டு, “கோவை ஊரக வனம் – ஊராட்சிகளின் சங்கமம்” என்ற திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். (PDF  174KB)

படங்கள் ஏதும்  இல்லை

மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை தேதி ஜூலை 31 வரை நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவியர்கள் சேர,  நேரடி சேர்க்கை 15.06.2026 முதல் 30.06.2026 வரை மேற்கொள்ளப்பட்டது தற்போது 31.07.2026 வரை  சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. (PDF 237KB)

Minister Meeting 02-07-2026

அமைச்சர் தலைமையில் கோயம்புத்தூரில் சமூக நீதி விடுதி மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள் தலைமையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்கீழ், செயல்படும் சமூக நீதி விடுதிகளில் நடப்பு கல்வியாண்டில் (2026 – 2027) மாணாக்கர் சேர்க்கை தொடர்பான தேர்வுக்குழுக் கூட்டம் இன்று (02.07.2026) நடைபெற்றது. (PDF 121KB)

படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூரில் விடுதி மாணவர்களுக்கான புகார் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளை தெரிவிக்க வாட்ஸ்அப் உதவி எண் 9445477016 தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், விடுதி நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான குறைகள் உள்ளிட்ட புகார்களை எந்நேரமும் தெரிவிக்க 9445477016 என்ற வாட்ஸ்அப் எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புகார் அளிக்கும் மாணவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும், புகாரின் விவரங்கள் மட்டுமே விசாரணை செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், […]

படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூரில் 9-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணி ஜூலை 1 முதல் தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026

தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10, 2026 வரை 9-வது சுற்று கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அனைத்து கிராமங்களிலும் உள்ள பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப. கேட்டுக்கொண்டுள்ளார். […]

GDP 29-06-2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (29.06.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.மதுராந்தகி அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். (PDF 221KB)

Pilse Polio 28-06-2026 02

சிறப்பு நோய்த்தடுப்பு முகாமில் அமைச்சர் அவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககம் சார்பில், தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் – 2026யை தொடங்கி வைத்தை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத்குமார் அவர்கள், தேசிய போலியோ சொட்டு மருந்தினை குழந்தைகளுக்கு வழங்கினார். (PDF  65KB)

coffee with collector 01

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் ‘காபி வித் கலெக்டர்’ கலந்துரையாடல் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பள்ளி மாணவ, மாணவியர்களுடன் (காபி வித் கலெக்டர்) என்ற கலந்துரையா டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 229KB)

Marathan 26-06-2026

மாவட்ட ஆட்சித்தலைவர் ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்’ விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 26/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான “ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ விழிப்புணர்வு மரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். (PDF 248KB)

படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் அரசுப் பொருட்காட்சி: 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வை

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

அரசுப் பொருட்காட்சியினை (24.06.2026) நேற்று வரை 62,536 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.8.95 இலட்சம் வருவாய் வரப்பெற்றுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 223KB)