ஊடக வெளியீடுகள்

Filter by:
AI and Data Science Building in Coimbatore on 04.08.2026

கோயம்புத்தூரில் ரூ.9.22 கோடி மதிப்பிலான அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக ரூ.9.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத் குமார் அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்து, வகுப்பறை மற்றும் ஆய்வகங்களை பார்வையிட்டார். (PDF […]

படங்கள் ஏதும்  இல்லை

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் ஆண்டு காரீப் பருவ பயிர்களைக் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

தமிழ்நாட்டில் 2026-27 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) Kharif பருவத்திற்கான அறிவிக்கை பெறப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அக்கிரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட். காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது காரீப் பருவ சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட (நெல் I, மக்காச்சோளம் I, சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கொள்ளுப்பயறு) பயிர்களைக் காப்பீடு செய்வதற்கான கடைசி […]

GDP on 03-08-2026 006

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 03-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (03.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 221KB)

படங்கள் ஏதும்  இல்லை

வெள்ளியங்காடு கிராமத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், வெள்ளியங்காடு கிராமம், பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில், 12.08.2026 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, 05.08.2026 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில், அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில், வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) அவர்கள் வெள்ளியங்காடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளார். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை […]

படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர், கோயம்புத்தூர் (மகளிர்), ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2026 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. (PDF 223KB)

Minister Inaugurates Completed Projects 01-08-2026 01

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.5.09 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2026

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் மற்றும் பேரூர் வட்டாரங்களில், பல்வேறு துறைகளின் கீழ் ரூ.5.09 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் இன்று (01.08.2026) திறந்து வைத்தார்.   (PDF 55KB) 

படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

2026–2027-ஆம் கல்வியாண்டிற்காக கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில், முழுமையாக தற்காலிக அடிப்படையிலும் தொகுப்பூதிய முறையிலும் உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 57KB)

CONVOCATION EVENT @ CBE LAW COLLEGE 01

கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியில் உச்சநீதிமன்ற நீதியரசர், மாநில அமைச்சர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

கோயமுத்தூர் மாவட்டம், அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் திருமதி.வெ.மோகனா அவர்கள் மற்றும் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, மாணாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள். (PDF 73KB)

Director Review 03-07-2026 04

கோயம்புத்தூரில் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் செயல்பாடு குறித்து இயக்குநர் காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப., ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநர் திருமதி.காயத்ரி கிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சமூக பாதுகாப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று (03.07.2026) நடைபெற்றது. (PDF 65KB)  

DC Inspection 03-07-2026 02

மலுமிச்சம்பட்டியில் ரூ.3 கோடி மதிப்பிலான விளையாட்டு மைதானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி, அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் விளையாட்டு மைதான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 63KB)