ஊடக வெளியீடுகள்
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் ஆகஸ்ட் 8-ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் குடிமைப்பொருள் தனிவட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் – 2026 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் வருகின்ற 08.08.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. மேற்படி […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 100% e-KYC கைரேகைப் பதிவை நிறைவு செய்ய சிறப்பு முகாம்கள்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கோயம்புத்தூர் […]
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘உயர்வுக்குப்படி’ உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு முகாம் ஆகஸ்ட் 7 முதல் தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத மாணாக்கர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் உயர்வுக்குப்படி சிறப்பு முகாம் எதிர்வரும் 07.08.2026 முதல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 63KB)
உயர்கல்விக்கான கல்வி நிதி உதவித்தொகையை 20 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில், 2025- 26 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த உயர்கல்விக்கு கல்வி நிதி உதவித்தொகை 20 மாணாக்கர்களுக்கு தனியார் பங்களிப்புடன் ரூ.1.5 இலட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பவனர் இ.ஆ.ப., அவர்கள், வழங்கினார். (PDF 55KB)
கோயம்புத்தூரில் மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.08.2026) நடைபெற்றது. (PDF 54KB)
‘முதல்வரின் முகவரி’ மனுக்கள் தீர்வு காணும் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026கோயம்புத்தூர் மாநகராட்சி, ஆர். எஸ். புரம் கலையரங்கத்தில், ‘முதல்வரின் முகவரி’ மனுக்களுக்கு தீர்வு காண்பது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 57KB)
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் ஓய்வூதியத் திட்டத்தில் சுற்றுலாத் துறை அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சேர்ந்து பயன்பெற அழைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு 60 வயதை எட்டிய பின் மாதந்தோறும் ரூ.3000/- உறுதியான ஓய்வூதியம் வழங்கும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சேர்ந்து பயனடையலாம். Pradhan Mantri Shram Yogi Maandhan Scheme என்ற திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக […]
12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் மருத்துவ முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026தேசிய கைத்தறி தினமானது, கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், பொதுமக்களால் நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை போற்றும் வகையிலும், உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவுத் தொழில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய தொழிலாக விளங்கி வருகிறது. இத்தொழில் ஏராளமான […]
வெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.08.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 50KB)
கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ‘GENESIS நெக்ஸ்ட்ஜென் ஸ்டார்ட்அப் உச்சிமாநாடு’ நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், ரத்தினம் கிராண்ட் ஹாலில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஸ்டார்ட்அப் ஹப் மற்றும் StartupTN இணைந்து “GENESIS நெக்ஸ்ட்ஜென் ஸ்டார்ட்அப் உச்சிமாநாடு – கோயம்புத்தூர் பதிப்பு” மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (04.08.2026) நடைபெற்றது. (PDF 234KB)