ஊடக வெளியீடுகள்
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்: 98 பயனாளிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், வெள்ளியங்காடு கிராமம், பத்ரகாளியம்மன் கோவில் அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (12.08.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 98 பயனாளிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 82KB)
தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.40 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.08.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 61KB)
தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான வழிகாட்டு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 11/08/202613.08.2026 அன்று காலை 10.00 மணியளவில், பொள்ளாச்சி தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி குழுமத்தில் (காயர் ஏற்றுமதி மையம், தள எண். 4, ரைட் கொங்கு சிட்டி, கோயம்புத்தூர் பிரதான சாலை, ஆச்சிப்பட்டி அஞ்சல், பொள்ளாச்சி – 642002) தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான வழிகாட்டு முகாம் நடைபெற உள்ளது. (PDF 227KB)
முதலமைச்சர் கோப்பை 2026–27: கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026–27 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் செப்டம்பர் முதல் அக்டோபர் 2026 வரை நடைபெறவுள்ளன. இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட விளையாட்டுகள் உட்பட மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க 06.08.2026 முதல் 31.08.2026 மாலை 6.00 மணி வரை இணையவழியில் முன்பதிவு செய்யலாம். (PDF 243KB)
“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” பெருந்திரள் உறுதிமொழி
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் சென்னை, மாநிலக் கல்லூரி அரங்கில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு – DRUG FREE TAMIL NADU – மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றதை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெருந்திரள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு, 5 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். (PDF […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், தொடங்கி வைத்தார். (PDF 69KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், இன்று (10.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 221KB)
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 அன்று தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2026உலக மக்களின் தொகையில் 24% பேர் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகையில் 1% பேர் திறந்த வெளியில் மலம் கழித்தால் கூட அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படலாம். தொற்றுடைய மண் மூலம், மண்ணில் விளையும் பொருட்கள் மூலம், மண்ணில் கை கால்கள் படுவதன் மூலம் மனிதர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசால் வருடம் இருமுறை நாடு தழுவிய குடற்புழு நீக்கும் திட்டம் […]
தொழில்முனைவு மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 17 முதல் தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) துறையின் கீழ், செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), அகமதாபாத்தில் உள்ள Entrepreneurship Development Institute of India (EDII) உடன் இணைந்து நடத்தும் ஓராண்டு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க (Entrepreneurship & Innovation) சான்றிதழ் படிப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 291KB)
12-வது தேசிய கைத்தறி தினம்: சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில், கைத்தறி துறையின் சார்பில், 12-வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.வே.சுரேந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். (PDF 64KB)