ஊடக வெளியீடுகள்
கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 22 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக எதிர்வரும் 22.08.2026 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கான அனைத்துத்துறை அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 13.08.2026 மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 226KB)
முதலமைச்சர் ஆகஸ்ட் 17 அன்று வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறையைத் தொடங்கி வைக்கிறார்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பத்திரப் பதிவுத்துறையில் வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறையினை வருகின்ற 17.08.2026 அன்று துவக்கி வைக்கவுள்ளார். ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடைபெற்ற வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை குறித்தான கலந்தாய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தகவல். (PDF 246KB)
மருத்துவமனையில் கைவிடப்பட்ட “பூவிழி” பெண் குழந்தை: 30 நாட்களுக்குள் உரிமை கோரலாம்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27.04.2026 அன்று பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர்களால் குழந்தை மீட்கப்பட்டு 08.07.2026 அன்று குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைக்கு “பூவிழி” என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தை தொடர்பாக உரிமை கோர விரும்புவோர், உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அணுக வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் யாரும் உரிமை […]
மீட்கப்பட்ட “ஆதித்தியன்” குழந்தை தொடர்பாக 30 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் உரிமை கோரலாம்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/202613.07.2026 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், அரசிபாளையத்தில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை, சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர்கள் மூலம் குழந்தை மீட்கப்பட்டு, 29.07.2026 அன்று குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகள் நலக்குழு அந்தக் குழந்தைக்கு “ஆதித்தியன்” என பெயரிட்டுள்ளது. மேற்கண்ட குழந்தை தொடர்பாக உரிமை கோர விரும்புவோர், உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கோயம்புத்தூர் […]
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வங்கிகளின் மாவட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 ஆம் ஆண்டு ஜூன் காலாண்டிற்கான வங்கிகளின் மாவட்ட ஆலோசனைக் குழு (District Consultative Committee) கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் DCC குழுத் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 13-08-2026 அன்று நடைபெற்றது. (PDF 227KB)
“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு: கோயம்புத்தூரில் மாணவர்களின் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.08.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 227KB)
ஸ்கால் இன்டர்நேஷனல் இந்தியா தேசிய மாநாடு 2026: கோயம்புத்தூரில் தொடக்க விழா நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026கோயம்புத்தூர் லீ மெரிடியன் ஹோட்டலில், சுற்றுலாத் துறையின் சார்பில், சர்வதேச அளவில் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் (SKAL INTERNATIONAL INDIA NATIONAL CONGRESS – 2026) ஸ்கால் இன்டர்நேஷனல் இந்தியாவின் தேசிய மாநாடு 2026 தொடக்க விழா நிகழ்ச்சியினை மாண்புமிகு சுற்றுலா த்துறை அமைச்சர் திரு.எஸ்.ராஜேஷ் குமார், அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் முன்னிலையில் இன்று (13-08-2026) தொடங்கி வைத்தார். (PDF 238KB)
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடல் – “Dry Day” அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்/பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் (FL2) செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் (FL3) செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் (FL3A), சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் (FL3AA) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் (FL11) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் எதிர்வரும் 15.08.2026 (சனிக்கிழமை) சுதந்திர தினத்தன்று Dry day ஆக அறிவித்து அனைத்து மதுபான உரிமத்தளங்களை மூட உத்திரவிடப்படுகிறது. விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை […]
80வது சுதந்திர தின விழா: கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியேற்றுகிறார்
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சிமைதானத்தில் எதிர்வரும் (15.08.2026) சனிக்கிழமை நடைபெறவுள்ள 80வது சுதந்திர தினவிழாவில் காலை 8.50 மணிக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார். (PDF 75KB)
“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு: கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர்களின் மனித சங்கிலி நிகழ்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் பகுதியில், “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை வலியுறுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.08.2026) துவக்கி வைத்தார். (PDF 224KB)