ஊடக வெளியீடுகள்
கோயம்புத்தூரில் RMV கோப்பை 2026 பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், விவேகானந்தா ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில், RMV கோப்பை 2026 – மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினை இன்று (19.08.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து, போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். (PDF 68KB)
கம்பாலப்பட்டியில் ரூ.5.94 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், கம்பாலப்பட்டியில் ரூ.5.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.08.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 67KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் 85 தற்காலிக பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர், குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்கள், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன: ஆய்வக நுட்புநர் நிலை-III (Lab Technician Gr-III) – 3 பணியிடங்கள் தொழில்சார் சிகிச்சையாளர் (DEIC) – 1 பணியிடம் மாவட்ட திட்ட மேலாளர் […]
முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்த 36 அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (17.08.2026), அரசுப் பள்ளிகளில் பயின்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 36 மாணாக்கர்களையும், அவர்களது பெற்றோர்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், GD Trust சார்பில் 48 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.10.22 இலட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கி, அவர்களை ஊக்குவித்தார். (PDF 63KB)
TANFINET தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதித் தகுதி தளர்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்காக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து வருகிறது. அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில், கடந்த மூன்று நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் ₹50 லட்சத்திலிருந்து ₹20 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு 12.08.2026 முதல் TANFINET இணையதள போர்டலில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் […]
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர், கோயம்புத்தூர் (மகளிர்), ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் அப்பேரல் தொடர்புடைய தொழிற்பிரிவுகள், டிரோன் பைலட், இன்டஸ்ட்ரிஸ் ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வெகிக்கிள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. 8 / 10 / 11 / 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி, டிப்ளமோ படித்த 14 வயது முதல் 40 […]
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், இன்று (17.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 66KB)
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பு பார்வையாளராக பங்கேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், அரசூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் கிராமசபை கூட்டம் இன்று (15.08.2026) நடைபெற்றது. இக்கிராம சபைகூட்டத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். (PDF 77KB)
80வது சுதந்திர தின விழா: கோயம்புத்தூரில் தேசியக் கொடியேற்றி தியாகிகளின் வாரிசுதாரர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கௌரவித்தார்
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சிமைதானத்தில் இன்று (15.08.2026) நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, மூவர்ண பலூன்களையும் மற்றும் சமாதானப்புறாக்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கும், மொழி போராட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். (PDF 72KB)
“உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம்: கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் ஆகஸ்ட் 19 முதல் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026தமிழ்நாடு அரசு, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் அவர்களின் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டவாறு, மக்களை நேரடியாக அணுகி அவர்களது குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகாணும் வகையில், அரசு இயந்திரமே களத்திற்கு வரும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வட்டத்தில் தங்கியிருந்து கள ஆய்வில் ஈடுபட்டு, அந்த வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றிச் சென்றடைவதை உறுதி […]