ஊடக வெளியீடுகள்

Filter by:
PR.NO.57 - A I D S AWARENESS 002

கோயம்புத்தூரில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (24.08.2026) மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தின் சார்பில், எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 65KB)

PR NO 56 HONBLE MINISTERS - EMPLOYMENT DEPARTMENT - JOB FAIR ORDER COPY GIVEN NEWS 001

கோயம்புத்தூரில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 1,266 பேருக்கு பணி நியமன ஆணைகள்

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2026

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரியில் உள்ள இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (22.08.2026) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் மற்றும் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் […]

PR NO 54 Special Higher Education Admission Camp news 001

கோயம்புத்தூரில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி சேர்க்கை முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

கோயம்புத்தூர் மாவட்ட த்தில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு உயர் கல்வி சேர்க்கை முகாம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 327KB)  

படங்கள் ஏதும்  இல்லை

நாக்பூர் தம்ம சக்கர விழா: தமிழக பௌத்தர்களுக்கு ரூ.5,000 வரை மானியம்

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவதற்காக, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 2026ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பௌத்தர்கள், விண்ணப்பப் படிவத்தை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 15.11.2026க்குள் […]

படங்கள் ஏதும்  இல்லை

ATMA திட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சியர் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) திட்டத்தில் காலியாக உள்ள வட்டார தொழில்நுட்ப மேலாளர் (BTM) மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் (ATM) பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தகுதியும் அனுபவமும் கொண்ட பணிநியமன முகமைகளிடமிருந்து (Recruitment Agency) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான முகமைகள் தங்களது விவரங்கள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகளை 27.08.2026க்குள் திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், தடாகம் ரோடு, […]

PR.NO.52 - TREE PLANTATION 00

சோமையம்பாளையத்தில் 1,200 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

கோயம்புத்தூர் மாவட்டம், சோமையம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், கோவை வனத்துறை மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கம் – நலச்சோலை திட்டத்தின்கீழ் 1200 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட வன அலுவலர் (கோவை வனக்கோட்டம்) திரு.வெங்கடேஷ் பிரபு இ.வ.ப., அவர்கள், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பாலுசாமி ஆகியோர் இன்று (20.08.2026) துவக்கி வைத்தனர். (PDF 56KB)  

படங்கள் ஏதும்  இல்லை

28.08.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 28.08.2026 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகிக்க உள்ளார். மாவட்ட விவசாயிகள் நேரடியாக கலந்து கொண்டு, தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து மனுக்களை அளித்து தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (PDF 216KB)

படங்கள் ஏதும்  இல்லை

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு கடன் திட்டங்கள் – ஆட்சியர் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தனிநபர் கடன், குழுக் கடன், கறவை மாடு கடன் மற்றும் வெளிநாட்டு உயர்கல்விக்கான கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தகுதியுடையவர்களுக்கு தனிநபர் கடனாக அதிகபட்சம் ரூ.25 இலட்சம் வரையும், சுய உதவிக்குழுக்களுக்கு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1.25 இலட்சம் வரையும், குழுவிற்கு அதிகபட்சம் ரூ.25 இலட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. கறவை மாடு […]

PR.NO.49 - UNGALAI THEDI UNGAL OORIL @ PERIYANAYAKKANPALAYAM 001

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில் ஆட்சியர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் வடக்கு, பெரியநாயக்கன்பாளையம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப.,, அவர்கள் இன்று (19.08.2026) கள ஆய்வு மேற்கொண்டு, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். (PDF 103KB)

படங்கள் ஏதும்  இல்லை

திருநங்கைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில், சுற்றுலாவில் ஆர்வமுள்ள  பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, (Transgender) திருநங்கைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுற்றுலா வழிகாட்டியாகப் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியுடைய திருநங்கைகள் இப்பயிற்சி திட்டத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் சங்கங்கள் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை திருநங்கைகளிடையே ஏற்படுத்தி, தகுதியும் ஆர்வமும் உள்ள திருநங்கைகளின் பெயர் விவரங்களைச் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டம் […]