ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் திட்டங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம் ) மற்றும் கல்வி கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. (PDF 234KB)

படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்ட சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

தமிழ்நாடு அரசால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நல மாணவர்/மாணவியருக்காக இரண்டு கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் பட்டப்படிப்பு, முதுகலை, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர தகுதியுடையவர்கள். தங்கும் வசதி மற்றும் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படும். (PDF 301KB)

GDP 08-06-2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF  221KB)    

படங்கள் ஏதும்  இல்லை

SSC CGL 2026 தேர்வு அறிவிப்பு வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வு–2026க்கான விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. (PDF  414KB)

படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – 2026

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2026

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும்  பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று  15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ரூபாய் 1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.        அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” எதிர்வரும்  15.08.2026  அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.  (PDF […]

DC Inspections 06-06-2026

பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2026

கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்   திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 235KB)

Minister Inspection 03

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் சமூகநீதி விடுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

கோயமுத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், சொக்காம்பாளையத்தில் செயல்பட்டு வரும் சமூகநீதி விடுதிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி.சம்பத்குமார் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 55KB)

District Collector Felicitates 73 School Headmasters for 100% SSLC Pass Result 02

மாவட்ட ஆட்சித்தலைவர் 100% 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 73 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், 2025 – 2026ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 73 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார். (PDF 145KB)

05-06-2026 world environment Day

மாவட்ட ஆட்சித்தலைவர் உலக சுற்றுச்சூழல் தினத்தில் 1200 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செட்டிபாளையம் பேரூராட்சி, ஓராட்டுகுப்பை பகுதியில் 1200 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 243KB)

படங்கள் ஏதும்  இல்லை

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான குறைதீர்வு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

09.06.2026 அன்று மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் (The Madras Engineer Group Records) ஆவணக் காப்பகம் நடத்தும் திரளணியில், இராணுவத்தின் அனைத்து படைப்பிரிவுகளிலும் பணியாற்றி போரில் உயிர்நீத்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் சார்ந்தோர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான ஓய்வூதியம், SPARSH மற்றும் இதர குறைகளுக்கான குறைதீர்வு நிகழ்ச்சி 09.06.2026 அன்று காலை 09.00 மணியளவில் பீளமேடு, அவினாசி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. (PDF 192KB)