ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில், 1435-ம் பசலிஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)  குறிப்பிட்ட நாட்களில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிக்கை விடுத்துள்ளார்.(PDF 100KB)

படங்கள் ஏதும்  இல்லை

கோவை அரசுப் பொருட்காட்சி 2026: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், வ.உ.சி மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி  – 2026  நடத்துவது தொடர்பான  முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர்  இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 243KB)

படங்கள் ஏதும்  இல்லை

மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கான உரிமப் பதிவு மற்றும் புதுப்பித்தல்

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் முதியோர் இல்லங்கள் அனைத்தும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஒழுங்குமுறைசட்டம், 2014-இன்படி உரிமம் பெறாமல் செயல்படுவது குற்றம் என்றும், இணையதளத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 418KB)

Disaster Metting 02-06-2026 04

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. (PDF 83 KB)

படங்கள் ஏதும்  இல்லை

MSME யின் அவசரகால கடன் வரம்பு உத்தரவாதத் திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

கோயமுத்தூர் மாவட்டம், கொடிசியா அலுவலகத்தில் எதிர்வரும் 05.06.2026 அன்று அவசரகால கடன் வரம்பு உத்தரவாதத் திட்டம் (ECLGS 5.0) குறித்த MSME விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. (PDF 226KB)

படங்கள் ஏதும்  இல்லை

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் / மாணவியர்களுக்கான விடுதிகள்

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

தமிழ்நாடு அரசால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் /மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நல மாணவர் / மாணவியர்களுக்கென  மொத்தம் 25 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. (PDF 143KB)

HONBLE PROHIBITION AND EXCISE MINISTER MEETING PHOTO (4) 01

மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் 

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள் தலைமையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்ந்த பணி ஆய்வுக்கூட்டம்  இன்று  (01.06.2026)  நடைபெற்றது. (PDF 235KB)

GDP 01-06-2026 04

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF  223KB)

படங்கள் ஏதும்  இல்லை

பழங்குடியினருக்கான TNPSC சிறப்பு பயிற்சி மையம்

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், இயங்கும் கோவை, ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும்  நிலையம் சார்பில்  தோலம்பாளையம், வெள்ளியங்காடு மற்றும் பாலமலை ஆகிய பகுதிகளை சார்ந்த பழங்குடியின மக்கள் பயன்பெறும் வண்ணம் வெள்ளியங்காடு கிராமத்தில் உள்ள சமுதாயகூடத்தில் இந்நிலையத்தின் சார்பில் பழங்குடியினருக்கான  இலவச கட்டணமில்லா  சிறப்பு TNPSC பயிற்சி மையம் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பானது வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.  (PDF 255KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் நீலம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள NH-544 கோயம்புத்தூர் புறவழிச்சாலையை விரிவுபடுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சார்பில் நீலம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள NH-544 கோயம்புத்தூர் புறவழிச்சாலையை 2 வழிச்சாலையிலிருந்து இரு புறசேவைச் சாலைகளுடன் கூடிய நவீன 6 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . (PDF 74KB)