அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் விடுபட்ட ஆவணங்களை அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் | கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு மொத்தம் 686 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 16 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாக கண்டறியப்பட்டுள்ளன. மீதமுள்ள 670 விண்ணப்பங்களில் 161 விண்ணப்பங்களில் சான்றிதழ்கள்/ஆவணங்கள் விடுபட்டுள்ளன. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், விடுபட்டுள்ள சான்றிதழ்கள்/ஆவணங்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை 03.10.2026 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
30/09/2026 | 03/10/2026 | பார்க்க (521 KB) விண்ணப்பதாரர்கள் பட்டியல் (431 KB) |
| தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் | மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால், தாய்மையினையும், குழந்தை பிறப்பினை போற்றும் வகையிலும், அரசு மருத்துவமனைகளில் நிகழும் குழந்தை பிறப்பை அதிகரிக்கவும், பொது மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீதுள்ள நம்பிக்கையை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டமானது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால், வருகின்ற 28.09.2026 அன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. 22.06.2026 அன்று 12.00 முற்பகல் (AM) முதல் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. |
27/09/2026 | 09/11/2026 | பார்க்க (95 KB) |
| 2026-2027 -ஆம் நிதியாண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம் | கோயம்புத்தூர் மாவட்டம் 2026-2027 -ஆம் நிதியாண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம் |
01/04/2026 | 31/03/2027 | பார்க்க (1 MB) |
| விளாங்குறிச்சி கிராமத்தில் ‘எஸ்’ வளைவு சீரமைப்புப் பணிக்காக, RFCTLARR சட்டம், 2013-ன் பிரிவு 11(1)-இன் கீழ் முதல்நிலை அறிக்கை. | கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குறிச்சி கிராமத்தில் 1,608 சதுர மீட்டர் (39.73 சென்ட்) பரப்புள்ள நிலத்தை ‘எஸ்’ வளைவினை சரிசெய்து நேராக சாலை அமைக்க பொது நலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படுவதாக அரசு கருதுகிறது. |
02/07/2026 | 02/07/2027 | பார்க்க (1 MB) |
| தன்னார்வ இரத்த தான முகாம் | கோவை மாவட்ட தன்னார்வ இரத்த தான முகாம் அட்டவணை ஜூன் 2026 முதல் மே 2027 வரை. |
11/06/2026 | 31/05/2027 | பார்க்க (582 KB) |
| ஒருவழிச் சாலைகளின் விவரங்கள் – கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2025 | ஒருவழிச் சாலைகளின் விவரங்கள் – கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2025 |
31/01/2025 | 31/12/2026 | பார்க்க (1,017 KB) |