09.01.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 09.01.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மேலும் பலதமிழ்நாடு சிறு தானிய மாநாடு மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சியினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 07/01/2023கோயம்புத்தூர் மாவட்டம், நிர்மலா மகளிர் கல்லூரியில் 07.01.2023 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சிறு தானிய மாநாடு மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப, மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப, நிர்வாக இயக்குநர், தலைமை சித்த மருத்துவர், ஆரோக்கிய ஹெல்த்கேர் & திட்ட குழு உறுப்பினர் மரு.ஜி.சிவராமன், உலக சாதனைகள் யூனியன் (புளோரியா – USA) […]
மேலும் பலமாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2023மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திரு. ரகு, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு. துவாரகர்நாத் சிங் மற்றும் அரசுத் துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.(PDF 167KB)
மேலும் பலவேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் இயக்குநர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 06.01.2023 அன்று வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் இயக்குநர் திரு.நடராஜன் இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சபி அகமது மற்றும் வணிகர்கள், வேளாண் விற்பனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.(PDF 48KB)
மேலும் பலதுடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தின் உற்பத்தி பிரிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2023துடியலூரில் உள்ள துடியலூர் கூட்டுறவு விவசாய ஸ்தாபனத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவுகளை 06.01.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் திருமதி.இந்துமதி, டியுகாஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கா.சிவகுமார், வேளாண்மை இணை இயக்குனர் திருமதி.முத்துலட்சுமி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.சபி அகமது, சேவா ஸ்தபன துணைத்தலைவர் ஆர்.செல்வராஜ் மற்றும் டியுக்காஸ் பணியாளர்கள் கலந்துகொண்டனர். […]
மேலும் பலவடபுதூர் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளராக பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2023கிணத்துக்கடவு வட்டம், வடபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் உள்ள வடபுத்தூர் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளராக நியமன ஆணையை 5.1.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அருகில் நகராட்சி ஆணையர் திரு.எம்.பிரதாப் ஐ.ஏ.எஸ்., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவுத் திட்டம்) திருமதி மகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
மேலும் பலமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 05.01.2023 அன்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.அருகில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாவட்ட மாற்றுத்திறானளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், உதவி சுற்றுலா அலுவலர் துர்காதேவி, தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளனர்.
மேலும் பலபுதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2023புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் / தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2023 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். (PDF 331KB)
மேலும் பலபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 04.01.2023 அன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.ஆர்.நடராஜன், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனாஆனந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அம்மன் கே.அர்ச்சுணன் (கோவை வடக்கு), திரு.ஏ.கே.செல்வராஜ்(மேட்டுப்பாளையம்), திரு.வி.பி.கந்தசாமி(சூலூர்) திரு.டி.கே.அமுல்கந்தசாமி(வால்பாறை), மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர்.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மாநில திட்டக்குழு கூடுதல் […]
மேலும் பலகிராம உதவியாளர் நேர்காணல் 05.01.2023 முதல் 10.01.2023 வரை நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 03/01/2023கிராம உதவியாளர் நேர்காணல் 05.01.2023 முதல் 10.01.2023 வரை நியமிக்கப்பட்ட இடங்களில் நடைபெறவுள்ளது.(PDF 238KB)
மேலும் பல