Close

ஊடக வெளியீடுகள்

Filter:
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) நடத்தும் கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்( Job Mela )

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2023

மாவட்ட அளவில் நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாம், வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் பயனடையுமாறு மாவட்டஆட்சித்தலைவர் திரு. கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.  (PDF 530KB)

மேலும் பல
2023032451

பொள்ளாச்சி வட்டம், மண்ணூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2023

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், மண்ணூர் கிராமத்தில் தாம்சன் மண்டபத்தில் 16.03.2023 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் திரு.பிரியங்கா இ.ஆ.ப., ஊராட்சி மன்ற தலைவர்கள் வள்ளிபரமன், (மண்ணூர்), பொன்னுசாமி(இராமபட்டிணம்), ரமேஷ்(சேரக்காம்பாளையம்) துணைத்தலைவர்கள் சசிகலா( இராமப்பட்டிணம்), ராசு( மண்ணூர்), மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை […]

மேலும் பல

UMagine Catalyst’23 கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2023

கோயமுத்தூர்‌ மாவட்டம்‌ கேபிஆர் பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கல்லூரியில்‌ 15.03.2023 அன்று UMagine Catalyst’23 கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும், கல்லூரி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., கேபிஆர் கல்வி நிறுவனங்கள் இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன், ஸ்டார்அப் தமிழ்நாடு ஈரோடு மண்டல ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், அலுவலர்கள் ராகுல், சுகன்யா, பிட்ஸ்கிரன்ச் நிறுவனர் விஜய் பிரவீன், பயோப்யூல் தலைமை செயல் அலுவலர் […]

மேலும் பல
20230315193

சூலூர் ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 14/03/2023

கோயம்புத்தூர் மாவட்டம், மாநகராட்சி பகுதிகள் மற்றும் சூலூர் ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் ஆகியவற்றில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், ப.சிவகாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.(PDF 75KB)

மேலும் பல
2023031417

மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து மாணவ மாணவியர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 14/03/2023

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் 14.03.2023 அன்று மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து மாணவ மாணவியர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் இந்துமதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் இணை பதிவாளர் சிவகுமார் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் தெற்கு உட்கோட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது வருகின்ற 17.03.2023 அன்று கோயம்புத்தூர் தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2023

கோயம்புத்தூர் தெற்கு உட்கோட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது வருகின்ற 17.03.2023 அன்று கோயம்புத்தூர் தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.(PDF 60KB) – பத்திரிக்கைச் செய்தி

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 13.03.2023 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2023

13.03.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 70KB)

மேலும் பல

உப்பிலிபாளையம் மற்றும் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 12/03/2023

கோயம்புத்தூர் மாவட்டம் உப்பிலிபாளையம் மற்றும் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் 12.03.2023 அன்று மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் கே.இரவிச்சந்திரன் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் […]

மேலும் பல

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மாநகராட்சியின் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2023

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகள் உள்ளடக்கிய குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை 10.03.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ,ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ஏ.செந்தில் குமார், மேற்பார்வை பொறியாளர் ராஜி, நிர்வாக பொறியாளர் செல்லமுத்து, உதவி நிர்வாக பொறியாளர்கள் செந்தில்குமார், ராதா ஆகியோர் கலந்து கொண்டனர். (PDF 250KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திறன் வளர்ப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட வள பயிற்றுநர் காலிப்பணியிடம் உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2023

கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திறன் வளர்ப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட வள பயிற்றுநர் காலிப்பணியிடம் உள்ளது. இப்பணியிடம் மாவட்ட அளவில் கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தகுதிகள் உள்ளவர்கள் 20-03-2023 தேதிக்குள் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 2-வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர்-641 018 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயணடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் […]

மேலும் பல