Close

ஊடக வெளியீடுகள்

Filter:

வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

வெளியிடப்பட்ட நாள்: 26/01/2023

கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார். (PDF 224KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

எங்கிருந்தும், எந்நேரமும் இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் .இந்த வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2023

எங்கிருந்தும், எந்நேரமும் இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் .இந்த வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே (‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’) https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் .(PDF 180KB)  

மேலும் பல

தேசிய வாக்காளர்‌ தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்களை வழங்கினார்‌

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2023

கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ 25.01.2023 அன்று தேசிய வாக்காளர்‌ தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ / மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ பரிசு மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்களை வழங்கினார்‌. அருகில்‌ மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (தேர்தல்‌) திரு.சிவக்குமார்‌, கோட்டாட்சியர்‌ திரு.பண்டாரிநாதன்‌, தேர்தல்‌ பிரிவு வட்டாட்சியர்‌ திருமதி.விஜயலட்சுமி ஆகியோர்‌ உள்ளனர்‌.

மேலும் பல

தைபூச விழா முன்னேற்பாட்டு பணிகள்‌ தொடர்பான ஆலோசனைக்கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2023

மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்த்திருவிழா மற்றும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் திருத்தேர் பெருந்திருவிழா முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அருகில்‌மாநகர காவல்‌ துணை ஆணையர்கள்‌ (சட்டம்‌ ஒழுங்கு) திரு.சந்தீப்‌ இ.கா.ப., (போக்குவரத்து) திரு.மதிவாணன்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ப்பி.எஸ்‌.லீலா அலெக்ஸ்‌ மற்றும்‌ அரசுத்துறை அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

மேலும் பல

வருவாய்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2023

கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ 25.01.2023 அன்று வருவாய்துறை அலுவலர்களுடனான பணிஆய்வுக்கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ 7 மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ. ஆய. , அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது. அருகில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ப்பி.எஸ்‌.லீலா அலெக்ஸ்‌, சார்‌ ஆட்சியர்‌ செல்வி.பிரியங்கா இ.ஆ.ப., கோட்டாட்சியர்கள்‌ திரு.பண்டாரிநாதன்‌, செல்வி.பூமா ஆகியோர்‌ உள்ளனர்‌.

மேலும் பல

காரமடை நகராட்சிப்பகுதிக்குட்பட்ட அம்பேத்கர்‌ நகர்‌ மற்றும்‌ எத்தப்பன்‌ நகரில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2023

கோவை மாவட்டம்‌ மேட்டுப்பாளையம்‌ வட்டம்‌, காரமடை நகராட்சிப்பகுதிக்குட்பட்ட அம்பேத்கர்‌ நகர்‌ மற்றும்‌ எத்தப்பன்‌ நகரில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,அப்பகுதி மக்களின்‌ அடிப்படை கோரிக்கைகளான பட்டா வழங்குதல்‌, மின்‌ இணைப்பு வழங்குவது குறித்து கேட்டறிந்தார்‌. அருகில்‌ காரமடை நகராட்சி ஆணையாளர்‌ திரு.பால்ராஜ்‌ உள்ளார்‌.

மேலும் பல

கறிவேப்பிலை சாகுபடி மற்றும்‌ ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான கருத்தரங்கில்‌ அமைக்கப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2023

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ காரமடை திருமண மண்டபத்தில்‌ தோட்டக்கலைத்துறை சார்பில்‌ இன்று கறிவேப்பிலை சாகுபடி, சந்தைப்படுத்துதல்‌, மற்றும்‌ ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான பங்குதாரர்கள்‌ மற்றும்‌ விவசாயிகளுடானான கருத்தரங்கில்‌ அமைக்கப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. அருகில்‌ தோட்டக்கலை துறை துணை இயக்குனர்‌ திருமதி.புவனேஸ்வரி, அருகில்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நறுமணம்‌ மற்றும்‌ வாசனை திரவிய பயிர்கள்‌ துறை தலைவர்‌ முனைவர்‌.கே.வெங்கடேசன்‌, இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன முதுநிலை அறிவியலாளர்‌ முனைவர்‌.வி.சங்கர்‌ […]

மேலும் பல

கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டங்கில் 24.01.2023 அன்று கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் திரு.தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப , கூட்டுறவு சங்க தேர்தல் செயலாளர் / கூடுதல் பதிவாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்கத்தின் இணை பதிவாளர் பார்த்திபன், கூட்டுறவு சங்க பதிவாளர் கண்ணப்பராஜா, மத்திய கூட்டுறவு வங்கியின் […]

மேலும் பல
Street food vendor

கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள சாலையோரம் செயல்பட்டு வரும் உணவகங்கள், தள்ளுவண்டி உணவு கடைகள் சிறப்பு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2023

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, ஆணையாளர், அவர்களின் உத்தரவின்படியும், கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள சாலையோரம் செயல்பட்டு வரும் உணவகங்கள், தள்ளுவண்டி உணவு கடைகள் ஆகியவற்றை 10.01.2023 முதல் 13.01.2023 ஆகிய தேதிகளில் சிறப்பு களஆய்வு (Special Drive) மேற்கொள்ளப்பட்டது. (PDF 290KB)  

மேலும் பல

கோவை மாநகராட்சியின்‌ கவுண்டம்பாளையம்‌ வடவள்ளி & விரகேரளம்‌ பகுதிகளுக்கு 21.01.2023 மற்றும்‌ 22.01.2023 ஆகிய தினங்களில்‌ மேம்பாலப்‌ பணிகளுக்காக குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தப்படுகிறது -பத்திரிக்கைச்செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2023

தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தால்‌ பராமரிக்கப்படும்‌ கவுண்டம்பாளையம்‌ வடவள்ளி வீரகேரளம்‌ கூட்டுகுடிநீர்‌ திட்டத்தில்‌ பெரியநாய்க்கன்பாளையம்‌ மேம்பாலப்‌ பணிகளுக்காக குழாய்கள்‌ இணைப்பு பணிகள்‌ 21.01.2023 மற்றும்‌ 22.01.2023 ஆகிய தினங்களில்‌ மேற்கொள்ளப்பட இருப்பதால்‌ இத்திட்டத்தின்கீழ்‌ பயன்பெறும்‌ கோவை மாநகராட்சியின்‌ கவுண்டம்பாளையம்‌ வடவள்ளி & விரகேரளம்‌ பகுதிகளைககு 21.01.2023 மற்றும்‌ 22.01.2023 ஆகிய தினங்களில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தப்படும்‌. பணிகள் முடிக்கப்பட்டு 23.01.2023 அன்று காலை முதல்‌ குடிநீர்‌ வினியோகம் செயல்பாட்டுக்கு வரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உள்ளாட்சி நிறுவனங்களும்‌, […]

மேலும் பல