பில்லூர், குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்த ஆலோசனைக் கூட்டம்தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பில்லூர்: குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.வி.தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப, ஆகியோர் தலைமையில் 28.01.2023 அன்று நடைபெற்றது . உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷாமிளா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உயர் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் .
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 27.01. 2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி. எஸ்.சமீரன் இ.ஆ.ப., விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடைபெற்றது. அருகில் மாவட்ட வன அலுவலர் திரு.அசோக்குமார் இ.வ.ப., இணை இயக்குநர் வேளாண்மை முத்துலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஷபி அகமது, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, செல்வி.செளமியா ஆனந்த் இ.ஆ.ப., விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர்.
மேலும் பலகுடியரசு தினத்தினை முன்னிட்டு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், அரசம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2023குடியரசு தினத்தினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், அரசம்பாளையம் ஊராட்சி, காரச்சேரியில் கிராம சபை கூட்டம் 26.01.2023 அன்று நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். மேலும் கிராம சபை கூட்டத்தில் அரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர்.அலர்மேல்மங்கை இ.ஆ.ப.,, பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி. பிரியங்கா இ.ஆ.ப., மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், உதவி இயக்குனர் […]
மேலும் பலவ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2023கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார். (PDF 224KB)
மேலும் பலஎங்கிருந்தும், எந்நேரமும் இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் .இந்த வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2023எங்கிருந்தும், எந்நேரமும் இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் .இந்த வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே (‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’) https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் .(PDF 180KB)
மேலும் பலதேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 25.01.2023 அன்று தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.சிவக்குமார், கோட்டாட்சியர் திரு.பண்டாரிநாதன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் திருமதி.விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர்.
மேலும் பலதைபூச விழா முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2023மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்த்திருவிழா மற்றும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் திருத்தேர் பெருந்திருவிழா முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அருகில்மாநகர காவல் துணை ஆணையர்கள் (சட்டம் ஒழுங்கு) திரு.சந்தீப் இ.கா.ப., (போக்குவரத்து) திரு.மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.
மேலும் பலவருவாய்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 25.01.2023 அன்று வருவாய்துறை அலுவலர்களுடனான பணிஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் 7 மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ. ஆய. , அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா இ.ஆ.ப., கோட்டாட்சியர்கள் திரு.பண்டாரிநாதன், செல்வி.பூமா ஆகியோர் உள்ளனர்.
மேலும் பலகாரமடை நகராட்சிப்பகுதிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் மற்றும் எத்தப்பன் நகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2023கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை நகராட்சிப்பகுதிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் மற்றும் எத்தப்பன் நகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,அப்பகுதி மக்களின் அடிப்படை கோரிக்கைகளான பட்டா வழங்குதல், மின் இணைப்பு வழங்குவது குறித்து கேட்டறிந்தார். அருகில் காரமடை நகராட்சி ஆணையாளர் திரு.பால்ராஜ் உள்ளார்.
மேலும் பலகறிவேப்பிலை சாகுபடி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான கருத்தரங்கில் அமைக்கப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2023கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை திருமண மண்டபத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் இன்று கறிவேப்பிலை சாகுபடி, சந்தைப்படுத்துதல், மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான பங்குதாரர்கள் மற்றும் விவசாயிகளுடானான கருத்தரங்கில் அமைக்கப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் திருமதி.புவனேஸ்வரி, அருகில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நறுமணம் மற்றும் வாசனை திரவிய பயிர்கள் துறை தலைவர் முனைவர்.கே.வெங்கடேசன், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன முதுநிலை அறிவியலாளர் முனைவர்.வி.சங்கர் […]
மேலும் பல