திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்களுக்கு முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (05.02.2023) கோயம்புத்தூர் மாவட்டத்தின் 183வது மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்களுக்கு முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் பலதிரு. கிராந்திகுமார் இ.ஆ.ப கோயம்புத்தூர் மாவட்ட புதிய ஆட்சியர்
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2023திரு. கிராந்திகுமார் இ.ஆ.ப கோயம்புத்தூர் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்
மேலும் பலமாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ முகாம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வட்டாரங்களில் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2023மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ முகாம் வருகிற 01.02.2023 முதல் 28.02.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் நடைபெற உள்ளது. இம்மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல் , தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், தனித்துவமான அடையாள அட்டை பதிவு மற்றும் ஆலோசனை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பயனாளிகள் தேர்வு செய்தல் போன்றவை முகாம் நடைபெறும் இடங்களில் செய்யப்பட இருக்கின்றன. இம்மருத்துவ முகாம்களில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் […]
மேலும் பலதமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அவர்கள் சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2023தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அவர்கள் சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. (PDF 32KB) – பத்திரிக்கைசெய்தி
மேலும் பலமத்தியசிறையில் காலியாகவுள்ள ஓர் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்தினை மதிப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2023மத்தியசிறையில் காலியாகவுள்ள ஓர் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்தினை மதிப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு M.A or M.Sc in Psychology or MSW தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள நபர்கள் சம்மந்தப்பட்ட கல்வி சான்றுகள், சாதிச் சான்று மற்றும் அனுபவ சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களுடன் “சிறைகண்காணிப்பாளர், மத்தியசிறை, கோவை.18” என்ற முகவரியிட்டு 10.02.2023-க்குள் கோவை மத்தியசிறையில் கிடைக்கும் வண்ணம் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. (PDF 85KB) […]
மேலும் பலஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2023கோயம்புத்தூர் மாவட்டம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 31.01.2023 அன்று இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் திட்டத்தில் மருத்துவ உபகரணங்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்து, இ.எஸ்.ஐ மருத்துவமனை கல்லூரி முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை அணிவித்து, தமிழ்மன்றத்தை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்வி இயக்குநர், மரு.ஆர்.சாந்திமலர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை மரு.எம்.ரவிச்சந்திரன், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) […]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.01.2023 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 30/01/202330.01.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் பலபில்லூர், குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்த ஆலோசனைக் கூட்டம்தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பில்லூர்: குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.வி.தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப, ஆகியோர் தலைமையில் 28.01.2023 அன்று நடைபெற்றது . உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷாமிளா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உயர் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் .
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 27.01. 2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி. எஸ்.சமீரன் இ.ஆ.ப., விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடைபெற்றது. அருகில் மாவட்ட வன அலுவலர் திரு.அசோக்குமார் இ.வ.ப., இணை இயக்குநர் வேளாண்மை முத்துலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஷபி அகமது, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, செல்வி.செளமியா ஆனந்த் இ.ஆ.ப., விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர்.
மேலும் பலகுடியரசு தினத்தினை முன்னிட்டு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், அரசம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2023குடியரசு தினத்தினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், அரசம்பாளையம் ஊராட்சி, காரச்சேரியில் கிராம சபை கூட்டம் 26.01.2023 அன்று நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். மேலும் கிராம சபை கூட்டத்தில் அரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர்.அலர்மேல்மங்கை இ.ஆ.ப.,, பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி. பிரியங்கா இ.ஆ.ப., மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், உதவி இயக்குனர் […]
மேலும் பல