ஊடக வெளியீடுகள்
செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 7 வரை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026கோயம்புத்தூர் இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 25.09.2026 முதல் 07.10.2026 வரை அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது. (PDF 224KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், இன்று (28.09.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 62KB)
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் இன்று (28.09.2026) தாய்மாமன் தங்கமோதிர திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத் குமார் அவர்கள் கலந்து கொண்டு, பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரத்தை வழங்கினார். (PDF 66KB)
உலக சுற்றுலா தினம் 2026-ஐ முன்னிட்டு சுற்றுலாத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்கள் தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 27/09/2026கோயம்புத்தூர், தி ரெசிடென்சி ஹோட்டலில் இன்று (27.09.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், உலக சுற்றுலா தினம் 2026-ஐ முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலாத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமையான முயற்சிகளைப் பயன்படுத்தி சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 159KB)
கோயம்புத்தூரில் 39 மையங்களில் TNPSC Group-I முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2026தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்–I (Group-I) முதல் நிலைத் தேர்வு 27.09.2026 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 39 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் 11,400 தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர். தேர்வு சுமூகமாக நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு, போக்குவரத்து, தடையற்ற மின்சாரம் மற்றும் அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் காலை […]
மாண்புமிகு அமைச்சர் திரு. க. விக்னேஷ் அவர்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 377 ஒதுக்கீட்டுதாரர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், குறிச்சி கிராமம், சுந்தராபுரம் செங்கப்பக் கோனார் திருமண மண்டபத்தில் இன்று (26-09-2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ், அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு, 377 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். (PDF 263KB)
குடும்ப அட்டைதாரர்களுக்கு e-KYC கைரேகைப் பதிவு – செப்டம்பர் 26-ஆம் தேதி சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி, முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை சரிபார்க்கும் வகையில், மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கைரேகை அடிப்படையிலான e-KYC பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.68% மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் 92.11% e-KYC பதிவு நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள குடும்ப உறுப்பினர்களுக்காக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் […]
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான குறைகளை தெரிவிக்க மாவட்ட குறைதீர்வு அலுவலர் நியமனம்
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் அவர்களின் ஆணைப்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத ஊரக இயக்கம் (VB-GRAM) / மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) தொடர்பான பொதுமக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள திரு. சி. மனோகரன் அவர்கள் மாவட்ட குறைதீர்வு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் தங்களது குறைகளை கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நேரிலோ, 9600366935 / 9443357569 என்ற அலைபேசி […]
ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில்கள் குறித்த பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களை கண்டறிவதற்காக 06.10.2025 அன்று ஐந்து நபர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவால் பரிசீலிக்கப்பட்ட 34,971 திருக்கோயில்கள் தொடர்பான விவரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை 25.09.2026க்குள் தெரிவிக்க அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, திருக்கோயில்கள் தொடர்பான விவரங்களில் ஏதேனும் விடுபாடுகள் அல்லது […]
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.09.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 236KB)