ஊடக வெளியீடுகள்
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் 22.09.2026 முதல் 23.09.2026 வரை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் 22.09.2026 முதல் 23.09.2026 வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டத் துறைத் தலைமை அலுவலர்கள் பொள்ளாச்சி வட்டத்தின் 65 வருவாய் கிராமங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற உள்ளனர். மேலும், 22.09.2026 அன்று மாலை 4.00 மணியளவில் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் நேரில் மனு அளிக்கலாம். இவ்வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி அரசின் […]
குடும்ப அட்டைதாரர்களுக்கான e-KYC சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.68 சதவீதமும், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் 91.97 சதவீதமும் e-KYC பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்ப உறுப்பினர்களின் e-KYC பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 19.09.2026 அன்று சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. எனவே, இதுவரை e-KYC பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள், அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று கைரேகையைப் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. […]
குடும்ப அட்டை தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம் 19.09.2026 அன்று நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெற்றுப் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 2026 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் 19.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் […]
சூலூர் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.09.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 63KB)
கல்விக் கடன் முகாம்: 45 மாணாக்கர்களுக்கு ரூ.10.26 கோடி கல்விக் கடன் வழங்க ஆணைகள்
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாமினை மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள் இன்று (17.09.2026) துவக்கி வைத்து, 45 மாணாக்கர்களுக்கு ரூ.10.26 கோடி கல்விக்கடனுக்கான ஆணைகளை வழங்கினார். (PDF 55KB)
வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து 25 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 18.09.2026 அன்று வால்பாறை நகராட்சி பேருந்து நிலையம் அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில், காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், […]
மதுக்கரையில் அரசு பள்ளி மற்றும் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், அறிவொளி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் நியாய விலைக்கடையை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 55KB)
சிட்கோ தொழிற்பேட்டையின் அடிப்படை வசதிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன்ராஜா அவர்கள், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. க. விக்னேஷ் அவர்கள் முன்னிலையில், சிட்கோ தொழிற்பேட்டையின் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 53KB)
கூடலூரில் பயனாளிகளுக்கு வேளாண்மை சார்ந்த நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், கூடலூர் நகராட்சியில், வேளாண்மைத்துறை சார்பில் இன்று (15.09.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 59KB)
கோயம்புத்தூரில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி 2026 சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள், தீபாவளி 2026-ஐ முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சார்பில் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, இன்று (15.09.2026) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். (PDF 67KB)