ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

கோவை மத்திய சிறையில் இரண்டு தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2026

கோவை மத்திய சிறையில் கலியாகவுள்ள இரண்டு தூய்மை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (PDF 328KB)

படங்கள் ஏதும்  இல்லை

கோவை மத்திய சிறையில் ஆண் செவிலி உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2026

கோவை மத்திய சிறையில் கலியாகவுள்ள ஒரு ஆண் செவிலி உதவியாளர் பணியிடத்தை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 244KB)

படங்கள் ஏதும்  இல்லை

செப்டம்பர் 22, 2026 அன்று கோயம்புத்தூர் மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மெகா முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து 25 இடங்களில் சிறப்பு மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 22.09.2026 அன்று கோயம்புத்தூர் மேற்கு ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், இலவச அறுவை சிகிச்சைக்கான […]

PR.NO.55 - NORTH EAST MONSOON PRECAUTION MEETING 002

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2026

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. (PDF 79KB)

படங்கள் ஏதும்  இல்லை

நாக்பூர் தம்ம சக்கர பரிவர்தன விழாவில் பங்கேற்கும் பௌத்தர்களுக்கு ரூ.5,000 வரை பயண மானியம்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவதற்கு, நபர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.5,000 வரை நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 2026ஆம் ஆண்டு பயணம் மேற்கொள்ள விரும்பும் பௌத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகப் பெறலாம் அல்லது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். […]

படங்கள் ஏதும்  இல்லை

தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

தீபாவளி பண்டிகை 08.11.2026 அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளைத் தவிர) தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விரும்புவோர் 21.09.2026 முதல் 21.10.2026 வரை இ-சேவை மையங்கள் மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்கள், கட்டிட வரைபடம், சொத்து வரி ரசீது, உரிமையாளர்/கட்டிட உரிமையாளரின் சம்மதக் கடிதம், ரூ.700 உரிமக் கட்டணத்திற்கான E-Challan ரசீது, புகைப்படம், PAN, ஆதார் மற்றும் குடும்ப அட்டை/ஸ்மார்ட் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க […]

படங்கள் ஏதும்  இல்லை

2026ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் வகையில், 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 2026ஆம் ஆண்டிற்கும் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய சாதனையாளர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம். விண்ணப்பத்துடன் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக மேற்கொண்ட பணிகள் மற்றும் அதற்கான […]

படங்கள் ஏதும்  இல்லை

மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் BC, MBC/DNC மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

தமிழ்நாட்டைச் சேர்ந்த BC, MBC/DNC மாணவ, மாணவிகள் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள IIT, IIM, NIT, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு/பட்டமேற்படிப்பு பயிலும் நிலையில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருந்தால், கல்விக் கட்டணம் உள்ளிட்ட கட்டாயக் கட்டணங்களுக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 2026–27ஆம் கல்வியாண்டிற்கான Fresh மற்றும் Renewal விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் மூலம் சமர்ப்பிக்க […]

படங்கள் ஏதும்  இல்லை

OBC, EBC மற்றும் DNT மாணவர்களுக்கான PM YASASVI கல்வி உதவித்தொகைத் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

2026–27ஆம் கல்வியாண்டில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள Top Class Schools பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும், OBC, EBC மற்றும் DNT பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான தமிழக மாணவ, மாணவியர்கள் PM YASASVI கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், 9–10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 மற்றும் 11–12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்திற்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப […]

படங்கள் ஏதும்  இல்லை

செப்டம்பர் 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 25.09.2026 அன்று நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், 25.09.2026 அன்று காலை 10.30 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது தள கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட விவசாயிகள் நேரடியாகக் கலந்து கொண்டு, தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். (PDF 68KB)