ஊடக வெளியீடுகள்
தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 22/09/20262026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை 08.11.2026 அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளைத் தவிர) தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விரும்புவோர் 18.10.2026க்குள் இ-சேவை மையங்கள் மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்கள், கடையின் வரைபடம், சொத்து வரி ரசீது, கட்டிட உரிமையாளரின் சம்மதக் கடிதம், ரூ.700/- உரிமக் கட்டணத்திற்கான E-Challan ரசீது, புகைப்படம், PAN, ஆதார் மற்றும் குடும்ப அட்டை/ஸ்மார்ட் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். […]
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பொள்ளாச்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப.,, அவர்கள் இன்று (22.09.2026) கள ஆய்வு மேற்கொண்டு, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். (PDF 65KB)
கோயம்புத்தூரில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு. க.விக்னேஷ் பங்கேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னையில், இன்று (22.09.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மலுமாச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள் மாணவ மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். (PDF 114KB)
கோயம்புத்தூரில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் பங்கேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னையில், இன்று (22.09.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், இரத்தினபுரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் கலந்து கொண்டு, மாணவ மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். (PDF 196KB)
செப்டம்பர் 25-ஆம் தேதி பேரூரில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் மாதந்தோறும் நடத்தப்படும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 25.09.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, கோயம்புத்தூர் மாவட்டம், பேரூரில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு […]
பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு TNPSC போட்டித்தேர்வு இலவச பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள தேசிய பார்வையற்றோர் இணையத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி (Visually Impaired) மாணவ, […]
PM-YASASVI முதுநிலைப் பள்ளிக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம் – 2026–27
வெளியிடப்பட்ட நாள்: 21/09/20262026–27ஆம் கல்வியாண்டிற்கான PM-YASASVI முதுநிலைப் பள்ளிக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) மாணவ, மாணவியர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு வருமான வரம்பின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பாலிடெக்னிக், இளங்கலை தொழிற்படிப்பு, முதுகலை […]
2027 ஜூலை மாதம் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ், DGT மூலம் 2027 ஜூலை மாதத்தில் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் (All India Trade Test) தனித்தேர்வர்களாக (Private Candidates) பங்கேற்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 62KB)
சூலூரில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், சின்னியம்பாளையம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 64KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், இன்று (21.09.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 52KB)