ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார்–வங்கிக் கணக்கு இணைப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கு செப்டம்பர் 2026 முதல் ஆதார் அடிப்படையிலான பணப் பரிமாற்ற முறையில் உதவித்தொகை வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. (PDF 181KB)

படங்கள் ஏதும்  இல்லை

பெரியநாயக்கன்பாளையம் மனை மேம்பாட்டுத் திட்டம் நிலை–II-ல் அமைந்துள்ள வணிகக் கடை மனைகளுக்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் மின்னணு ஏலத்திற்கான காலக்கெடு நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சிறப்புத் திட்டக் கோட்டம்–3, கோயம்புத்தூர் அலுவலகத்தின் கீழ் உள்ள பெரியநாயக்கன்பாளையம் மனை மேம்பாட்டுத் திட்டம் நிலை–II-ல் அமைந்துள்ள வணிகக் கடை மனைகளுக்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் மின்னணு ஏலத்தில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 24.09.2026 முதல் 08.10.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. (PDF 51KB)

PR.NO.75 - DISTRICT-LEVEL MEETING ON EXPORT PROMOTION AND SKILL DEVELOPMENT 002

கோயம்புத்தூர் மாவட்டத்தை ஏற்றுமதி மையமாக மாற்றிட மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட தொழல் மையம் சார்பில் மாவட்டத்தை ஏற்றுமதி முகமாக மாற்றிடும் வகையில், திறன் மேம்பாட்டுத் திட்டக் கூட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 23.09.2026 அன்று நடைபெற்றது. (PDF 132KB)  

படங்கள் ஏதும்  இல்லை

விற்பனையாகாத மனைகளுக்கான மின்னணு ஒப்பந்தம் மற்றும் மின்னணு ஏலத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவை வீட்டு வசதிப் பிரிவின் கீழ் விற்பனையாகாமல் உள்ள வணிக மனைகள், கடை மனைகள், பொது உபயோக மனைகள் மற்றும் பள்ளி மனைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக, தமிழ்நாடு அரசு மின்னணு கொள்முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அசல் கடைசி நாள் 24.09.2026 காலை 11.00 மணி என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, நிர்வாக காரணங்களால் மின்னணு ஒப்பந்தம் மற்றும் மின்னணு ஏல முறையில் (E-Tender […]

படங்கள் ஏதும்  இல்லை

கோவை மத்திய சிறையின் கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட / கிளைச் சிறைகளில் 8 தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட சிறை / கிளைச் சிறைகளில் கலியாகவுள்ள 08 தூய்மை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 140 KB)  

PR.NO.72 - Residential Climate Change Education Initiative training programme news 004

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான காலநிலை மாற்றக் கல்வி முன்னெடுப்பு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே காலநிலை மாற்றம் குறித்த புரிதலை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 130 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சான்றிதழுடன் கூடிய 3 நாள் உண்டு உறைவிட காலநிலை மாற்றக் கல்வி முன்னெடுப்பு பயிற்சி இன்று (23.09.2026) காருண்யா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இப்பயிற்சி 24.09.2026 மற்றும் 25.09.2026 ஆகிய நாட்களில் சாடிவயல் பகுதியில் தொடர்ந்து நடைபெற […]

PR.NO.71 - UNGALAI THEDI UNGAL OORIL @ POLLACHI (SECOND DAY) 002

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பொள்ளாச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக இன்று (23.09.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 67KB)  

படங்கள் ஏதும்  இல்லை

காரமடை வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் – செப்டம்பர் 25

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து 25 இடங்களில் சிறப்பு மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாம்களில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், இலவச அறுவை சிகிச்சைக்கான பயனாளிகளைத் தேர்வு செய்தல், உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடன் உதவி, பேருந்து அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு உள்ளிட்ட […]

படங்கள் ஏதும்  இல்லை

தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026

2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை 08.11.2026 அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளைத் தவிர) தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விரும்புவோர் 18.10.2026க்குள் இ-சேவை மையங்கள் மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்கள், கடையின் வரைபடம், சொத்து வரி ரசீது, கட்டிட உரிமையாளரின் சம்மதக் கடிதம், ரூ.700/- உரிமக் கட்டணத்திற்கான E-Challan ரசீது, புகைப்படம், PAN, ஆதார் மற்றும் குடும்ப அட்டை/ஸ்மார்ட் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். […]

PR.NO.68 - UNGALAI THEDI UNGAL OORIL @ POLLACHI 002

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பொள்ளாச்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப.,, அவர்கள் இன்று (22.09.2026) கள ஆய்வு மேற்கொண்டு, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். (PDF 65KB)