ஊடக வெளியீடுகள்

Filter by:
PR.NO.39 - HONBLE BACKWARD WELFARE MINISTER -COOPTEX EVENT 003

கோயம்புத்தூரில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி 2026 சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள், தீபாவளி 2026-ஐ முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சார்பில் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, இன்று (15.09.2026) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். (PDF 67KB)  

படங்கள் ஏதும்  இல்லை

கற்பகம் டெக் பார்க்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செப்.15-ல் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து 25 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 15.09.2026 அன்று மதுக்கரை வட்டாரம், எச்சனாரி கற்பகம் டெக் பார்க், (கற்பகம் பல்கலைக்கழகம் அருகில்), PY. மஹால் அருகில், எச்சனாரி–பொள்ளாச்சி மெயின் ரோடு, கோயம்புத்தூர்–641021 பகுதியில், காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. […]

படங்கள் ஏதும்  இல்லை

குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், பொருட்களை எடுத்துச் செல்லுதல், குதிரை சவாரி, ரைடிங் பள்ளிகள், பந்தயம், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் அனைத்து குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களையும் தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தில் (TNAWB) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். குதிரை உரிமையாளர்கள் தங்களது குதிரைகளின் விவரங்களை தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, அவற்றின் நலன், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பராமரிப்பு தொடர்பான விதிமுறைகளை […]

PR.NO. 35 - HONBLE HEALTH MINISTER, HONBLE BACKWARD WELFARE MINISTER MEETING INSPECTION 006

டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு. கோ.க. அருண்ராஜ் அவர்கள் தலைமையில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் முன்னிலையில், டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (12.09.2026) நடைபெற்றது. (PDF 70KB)      

PR.NO.34 - HONBLE MINISTER FOR PROHIBITION AND EXCISE REVIEW MEETING 002

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில், தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. க. விக்னேஷ் அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் இன்று (12.09.2026) நடைபெற்றது. (PDF 53KB)  

PR.NO. 33 - GPF AND PENSION ADALAT NEWs 003

கோயம்புத்தூர் மண்டல ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (11.09.2026), மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் உதகமண்டலம் மாவட்டங்களை உள்ளடக்கிய கோயம்புத்தூர் மண்டல ஓய்வூதியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் (Pension Adalat) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதன்மைக் கணக்குத் தணிக்கை அலுவலக துணை மாநில கணக்காயர்கள் திரு. சவுரவ் ரமேஸ் மற்றும் திரு. தொம்மிகபி ஆகியோர் ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் […]

படங்கள் ஏதும்  இல்லை

செப்டம்பர் 17 அன்று கல்விக் கடன் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மற்றும் உயர்கல்வியில் சேர உள்ள மாணவர்களுக்கு கல்விக் கடன் எளிதில் கிடைக்கும் வகையில், 17.09.2026 அன்று கோயம்புத்தூர், பீளமேடு, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. (PDF 56KB)

படங்கள் ஏதும்  இல்லை

மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.30 கோடி மதிப்பிலான 377 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு 50% மானியமும், இதர விவசாயிகளுக்கு 40% மானியமும் வழங்கப்படும். தகுதியான பிரிவினருக்கு குறிப்பிட்ட கருவிகளுக்கு கூடுதல் மானியமும் வழங்கப்படும். விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7ஆம் தேதி மற்றும் 15 முதல் 21ஆம் தேதி வரை ‘உழவர் செயலி’ மூலம் […]

PR.NO.30 - THAIMAMAN THANGA MODHIRA THITTAM - GH INSPECTION 001

“தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் – பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்திற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (11.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 52KB)

PR.NO. 29 - PERUNTHALAIVAR KAMARAJAR BREAKFAST SCHEME REVIEW MEETING INSPECTION 010

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (11.09.2026), வரும் 17.09.2026 அன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதையொட்டி, திட்டத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 67KB)