ஊடக வெளியீடுகள்

Filter by:
PR.NO. 27 - COLLECTOR INSPECTS DEVELOPMENT WORKS @ KARAMADAI BLOCK 001

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.38 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கரம்பாளையம், பெள்ளாதி மற்றும் மூடுதுரை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் ரூ.5.38 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.09.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 65KB)

PR.NO. 26 - COLLECTOR INAUGRATES LAB 001

சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.80 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் CRI PUMP நிறுவனத்தின் பங்களிப்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.09.2026) திறந்து வைத்து, பார்வையிட்டார். (PDF 58KB)  

PR.NO. 25 - MADUKKARAI TALUK MASS CONDUCT NEWS 001

மதுக்கரையில் மக்கள் தொடர்பு முகாம்: 159 பயனாளிகளுக்கு ரூ.3.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், பிச்சனூர் கிராமம், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் மண்டபத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (09.09.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 159 பயனாளிகளுக்கு ரூ.3.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 67KB)  

PR.NO.24 - HONBLE BACKWARD WELFARE MINISTER INAUGURATES CM TROPY 0003

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைமையில் கோயம்புத்தூரில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், எஸ்.என்.எஸ். தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் இன்று (09.09.2026) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கையுந்து பந்து போட்டியில் பங்கேற்றார். (PDF 504KB)          

PR.NO.23 - DISTRICT COLLECTOR INAUGURATES AGRI SEMINAR 003

அங்கக வேளாண்மை மற்றும் குறுவை சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை பரிமளா சுப்ரமணியம் மஹாலில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற அங்கக வேளாண்மை மற்றும் குறுவை சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.09.2026) துவக்கி வைத்து, பார்வையிட்டார். (PDF 66KB)  

PR.NO.22 - DISTRICT COLLECTOR INAUGURATES TWO BUSES FOR STUDENTS OF TOPSLIP RESIDENTIAL SCHOOL 002

மாணவர்களின் பயன்பாட்டிற்காக பாரத் பெட்ரோலியம் வழங்கிய 2 பேருந்துகளின் இயக்கம் தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், டாப்சிலிப் வனத்துறை உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி மாணாக்கர்களின் பயன்பாட்டிற்காக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வழங்கிய 2 பேருந்துகளின் இயக்கத்தை இன்று (08.09.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 113KB)  

படங்கள் ஏதும்  இல்லை

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் மாணவியருக்கு கராத்தே, சிலம்பம் பயிற்சி – நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு கராத்தே மற்றும் சிலம்பம் தற்காப்புக் கலைகளில் அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கராத்தே பயிற்சி 3 மாதங்களில் 36 வகுப்புகளும், சிலம்பம் பயிற்சி 2 மாதங்களில் 24 வகுப்புகளும் வழங்கப்பட வேண்டும். தகுதியான கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை 15.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என […]

PR.NO.21 - GDP NEWS 003

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், இன்று (07.09.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய  நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 57KB)

படங்கள் ஏதும்  இல்லை

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகள் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உடல்நல ஆலோசனைக்கான சிறப்பு முகாம் 15.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 12 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை நகராட்சி அலுவலகங்கள் மற்றும் […]

படங்கள் ஏதும்  இல்லை

PM-YASASVI கல்வி உதவித்தொகை – தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) மாணவர்களுக்கான PM-YASASVI கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 2026–27 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் 9–10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.75,000 வரையும், 11–12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரையும் கல்வி மற்றும் விடுதிக் கட்டணமாக வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025–26 ஆம் […]