ஊடக வெளியீடுகள்
வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயிலும் சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026தமிழ்நாடு அரசு, 2026–2027 ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயிலும் 10 சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு, ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36 இலட்சம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. தகுதியான மாணவர்கள் QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்தில் இருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை உரிய […]
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், 2026–2027 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 71KB)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை அமைப்பாளர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2026கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலை அமைப்பாளர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் 05.09.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 69KB)
அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செப்.8-ல் நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து நடத்தும் சிறப்பு முகாம், 08.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இம்முகாமில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ், உதவி உபகரணங்கள், கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஆதார் மற்றும் […]
சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசு நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை கண்டறிந்து அகற்றும் பணிகள் தொடர்பாக, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.09.2026 அன்று, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 228KB)
ரூ.1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை மாண்புமிகு அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க. விக்னேஷ் அவர்கள் முன்னிலையில், இன்று (05.09.2026) பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.55.50 இலட்சம் மதிப்பில் புதிய சித்த மருத்துவ வெளிநோயாளிகள் பகுதி, ஆலம்பாளையம் மற்றும் ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் தலா […]
மாண்புமிகு 155-வது பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் மலர்மாலை அணிவித்து மரியாதை
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026கோயம்புத்தூர் மாநகராட்சி, வ.உ.சி. மைதானத்தில், கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (05.09.2026) மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். (PDF 68KB)
விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல் – 2027
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல் – 2027 – கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க அழைப்பு English –(PDF 351KB) Tamil – (PDF 80KB)
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள்
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிவருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி நீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் […]
டாப்செட்கோ கடன் திட்டங்களுக்கான கடன் மேளா செப்.7-ல் நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்காக குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான கடன் மேளா 07.09.2026 அன்று காலை 10.30 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. ஆட்டுப்பண்ணை, ஹோட்டல், ஜவுளிக்கடை உள்ளிட்ட தொழில்களுக்கு தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கு சிறுதொழில் கடன் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில கல்விக் […]