ஊடக வெளியீடுகள்

Filter by:
PR.NO.08 - COLLECTOR INSPECTS DEVELOPMENT WORKS @ SULTANPETTAI 001

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செலக்கரச்சல் மற்றும் வாரப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 220KB)  

குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் – கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) தொடங்கி வைத்து, விற்பனையை பார்வையிட்டார். (PDF 61KB)

PR.NO.06 - PHYSICALLY CHALLENGED SPECIAL CAMP 004

கோயம்புத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மெகா முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், மசக்காளிப்பாளையம், மணி மஹாலில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மெகா முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) துவக்கி வைத்தார். (PDF 220KB)  

படங்கள் ஏதும்  இல்லை

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள்: செப்டம்பர் 5-ஆம் தேதி அமைச்சர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, 05.09.2026 அன்று காலை 9.00 மணிக்கு, கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விடுதலைப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் […]

PR.NO.04 - COLLECTOR INSPECTION NEWS 001

அரசம்பாளையம் மற்றும் கொண்டாம்பட்டி ஊராட்சிகளில் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், அரசம்பாளையம் மற்றும் கொண்டாம்பட்டி ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 226KB)

PR.NO.03 - SPECIAL VETERINARY CAMP 002

காரச்சேரியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், அரசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரச்சேரி பகுதியில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.09.2026) தொடங்கி வைத்து பார்வையிட்டார். (PDF 220KB)    

படங்கள் ஏதும்  இல்லை

மசக்காளிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செப்.3-ல் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து நடத்தும் சிறப்பு முகாம், 03.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, மசக்காளிபாளையத்தில் அமைந்துள்ள மணி மகால் மணிஸ் திரையரங்கம் அருகில் நடைபெறுகிறது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், இலவச அறுவை சிகிச்சைக்கான பயனாளிகள் தேர்வு, உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, பராமரிப்பு […]

PR.NO.01 - MONITORING OFFICER REVIEW MEETING 003

வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு.ராகுல்நாத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள்,  முன்னிலையில், வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான  ஆய்வுக்கூட்டம்  இன்று (01.09.2026) நடைபெற்றது. (PDF 233KB)

படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செப். 2026 முதல் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள்

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரை மொத்தம் 216 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் கோயம்புத்தூர் கோட்டத்தில் 144 முகாம்களும், பொள்ளாச்சி கோட்டத்தில் 72 முகாம்களும் நடத்தப்பட உள்ளன. இம்முகாம்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கைமுறை கருவூட்டல், மலட்டுத்தன்மை சிகிச்சை, சினை சரிபார்ப்பு, ஆண்மை நீக்கம் மற்றும் சிறு அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கப்படும். […]

PR.NO.78 - TNSCPCR CHAIRMAN INSPECTS CHILD CARE CENTRES AND INSTITUTIONS 002

கோயம்புத்தூரில் குழந்தைகள் நல மையங்களில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர் அங்கன்வாடி மையங்கள், ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் கூர்நோக்கு இல்லம் மற்றும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றை தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவர் திருமதி. புதுக்கோட்டை விஜயா மற்றும் குழு உறுப்பினர்கள் திருமதி. ஸ்ரீ காவியா நாகராஜன், திருமதி. ஆர். ஜெயசுதா ஆகியோர் இன்று (31.08.2026) நேரில் பார்வையிட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டனர். (PDF 204KB)