ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

OBC, EBC மற்றும் DNT மாணவர்களுக்கு PM-YASASVI கல்வி உதவித்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

மத்திய அரசின் PM-YASASVI கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியான இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 மற்றும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்திற்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் […]

PR.NO.76 - GDP NEWS 001

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், இன்று (31.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 60KB)  

படங்கள் ஏதும்  இல்லை

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலனுக்காக புதிய வலைதளம்

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிரின் நலனுக்காக வாரியத்தின் மூலம் வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்களாக சேர்ந்து, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 463KB)

படங்கள் ஏதும்  இல்லை

போத்தனூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செப்.1-ல் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து நடத்தும் சிறப்பு முகாம், 25.08.2026 முதல் மாவட்டத்தின் 25 இடங்களில் நடைபெற்று வருகிறது. இம்முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும். அதன் தொடர்ச்சியாக, 01.09.2026 அன்று போத்தனூரில் அமைந்துள்ள பாத்திமா கனி கல்யாண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு UDID அட்டை பதிவு […]

படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் NEET-PG தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 29/08/2026

தேசிய மருத்துவ  தேர்வுகள் வாரியத்தால் (National Board of Examinations in Medical Sciences) நடத்தப்படும் NEET-PG தேர்வு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 30.08.2026 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 18 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் சுமார் 4,393 தேர்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தேர்வு சீராக நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, தடையற்ற மின்சாரம் மற்றும் அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு […]

PR NO - 73 HONBLE BACKWARD CLASS MINISTER - PATTA DISTRIBUTION EVENT NEWS 002

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 490 வீட்டுமனைப் பட்டாக்களை மாண்புமிகு அமைச்சர் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 29/08/2026

கோயம்புத்தூர் மாவட்டம், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் இன்று (29.08.2026), மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு முதற்கட்டமாக 490 வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். (PDF 227KB)  

படங்கள் ஏதும்  இல்லை

கோவையில் “தேசத்திற்கான சமரசம் 3.0” முகாம் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

மாண்புமிகு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை சமரசத்தின் மூலம் தீர்த்து வைக்கும் நோக்கில், “தேசத்திற்கான சமரசம் 3.0” என்ற தலைப்பில் நாடு தழுவிய சமரச தீர்வு முகாம் 01.10.2026 முதல் 31.12.2026 வரை மாவட்ட சமரச தீர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் அறிவுறுத்தலின்படியும், மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி. ஜெ. ஸ்ரீதேவி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கோயம்புத்தூர் மாவட்ட சமரச தீர்வு மையங்கள் மற்றும் […]

PR.NO.71-AGRI GDP 001

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (28.08.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF  221KB)

படங்கள் ஏதும்  இல்லை

கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

கோயம்புத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026–2027ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (Spot Admission) கால அவகாசம் மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 31.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் 52 வயது வரை சேரலாம். விண்ணப்பிப்பதற்காக நேரில் வருபவர்களுக்கு நிலையத்தின் உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்புக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.       (PDF 239KB)

படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027: கோவை மாவட்டத்தில் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் தீவிரம்

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டமாக, வீடுகள் பட்டியலிடல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு (HLO) பணிகள் கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் 01.08.2026 முதல் 30.08.2026 வரை கணக்கெடுப்பாளர்களால் வீடுகளுக்கு நேரில் சென்று, டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தங்களது வீடுகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான சரியான தகவல்களை எவ்வித தயக்கமும் இன்றி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கணக்கெடுப்புப் பணிகளில் ஏதேனும் வீடுகள் அல்லது பகுதிகள் விடுபட்டிருந்தால், […]